• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-19 17:13:35    
அரசுப்பணிக்கான தேர்வுமுறை

cri

தங் வம்சக்காலத்தில் தேர்வுகளுக்கு முன்பாக, தேர்வில் கலந்துகொள்வோரிடம் கலைத்திறமைக்கான சோதனையும் நடைபெற்றதாம். கவிதை எழுதச் செய்து, அவர்களது கல்வியியல் அறிவை அறிய முறபட்டதோடு சீனாவில் புகழ்பெற்ற ஒரு கலையான கையெழுத்துக்கலையையும் அறிய முறபட்டனர் தங் வம்சக்காலத்தினர். தங்களது கவிதைகள் மற்றும் இலக்கிய படைப்புகளை தாங்கிய தாள்சுருளை தேர்வில் கலந்துகொள்ள முற்படுவோர், அரசியல், பண்பாடு, சமூகத் தகுநிலை ஆகியவற்றில் பெயர் பெற்றவர்களிடம் வழங்கி, தங்களுக்காக அவர்களது பரிந்துரையை, பாராட்டை, நற்சான்றிதழை பெற விரும்பினர்.

மேலும் சீனாவில் நிலப் பிரபுத்துவச் சமுதாயம் தழைத்தோங்கிய காலத்தில்

இந்த அரச தேர்வுமுறைகள் முக்கிய பங்காற்றின. பேரரசர்கள் தங்களது குறுநிலங்களில், குறுநில அரசுகளில் பணியாற்ற, மக்களிலிருந்து திறமையானவர்களை தேர்ந்தெடுக்க இந்த அரச தேர்வுமுறை உதவியது. அதேவேளை இந்த நிலப்பிரபுத்துவ ஆட்சியமைப்பிலான தேர்வுகளின் உள்ளடக்கம் செழுமையாக இருக்கவில்லை. இது கல்வியியல் சார் தேடலை கொஞ்சம் மட்டுப்படுத்தியது எனலாம். ஆனால். பொதுவான கண்ணோட்டத்தில் இன்றைக்கும் சீன மக்களிடையே கல்விக்கும், தேர்வுகளுக்கும் உள்ள மதிப்பை ஒருவகையில் பண்டைய அரசுப் பணிக்கான தேர்வுமுறைகள் உருவாக்கி வலர்த்தன என்று சொல்வது ஏற்றுக்கொள்ளப் படவேண்டிய ஒன்றாகும். இந்த அரசுப்பணிக்கான தேர்வுமுறைகள் முக்கியமாக கன்ஃபியூசியஸின் சிந்தனைகள் மற்றும் அவரது கூற்றுகளின் திரட்டுகளை பெரிதும் சார்ந்தே அமைந்ததன காரணம், கன்ஃபியூசியஸின் சிந்தனைகள் புகழ் பெற்றன, பரவலடைந்தன. சீன மதிநுட்பத்தின், அறிவுப்புலத்தின் மூன்று முக்கிய தூண்களாக கன்ஃபியூசியனிசம் மாற இந்த தேர்வுகள் வழிகோலின என்றால் அது மிகையல்ல.

சீன வரலாற்றில், சமூக வளர்ச்சியில் ஒரு வித மறுமலர்ச்சி பங்காற்றிய இந்த தேர்வு வழிமுறைகள் நாம் முன்பே குறிப்பிட்டது போல 1300 ஆண்டுகாலமே நடைமுறையில் இருந்தன. ச்சிங் வம்சக்காலத்தின் வீழ்ச்சிக்கும் சரிவுக்கும் இணையாக இந்த தேர்வு வழிமுறையும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியது.

1 2 3