• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-19 17:13:35    
அரசுப்பணிக்கான தேர்வுமுறை

cri

8 பகுதி கட்டுரை வடிவத்தில் இந்த தேர்வு வழிமுறை மாறியது 1368 முதல் 1644ஆம் ஆண்டு வரையான மிங் வம்சக்காலத்தில்தான். அதை தொடர்ந்த ச்சிங் வம்சக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற அறிஞரான கு யான்வூ என்பவர் இந்த 8 பகுதி கட்டுரை தேர்வு வழிமுறையை மிகவும் கொடுமையான ஒன்றாக, சீரகுலைவான ஒன்றாக வர்ணித்தார். ச்சின் வம்சக்காலத்தின் முதல் பேரரசரான ச்சின் ஷுஹுவாங், கன்ஃபியூசிய சிந்தனைக்கு எதிராக நின்றவர். கன்ஃபியூசிய சிந்தனைகள் தாங்கிய நூல்களைய எரித்தும், கம்ஃபியூசியஸ் சிந்தனையை தழுவியவர்களை உயிரோடு புதைத்தும் அந்த பேரரசர் செய்த கொடுமையான செயலைவிட கொடுமையானது 8 பகுதி கட்டுரை வடிவ தேர்வு வழிமுறை என்றார் ச்சிங் வம்சக்காலத்தின் புகழ் பெற்ற அறிஞர் கு யான்வூ.

ச்சிங் வம்சக்காலம் சரியத்தொடங்கிஉஅ அதேவேளையில் அரசுப் பணிக்கான தேர்வு முறையும் முன்பு போல் திறமையானவர்களை தேர்வு செய்ய உதவவில்லை என்பதால், அதன் மதிப்பையும், வரவேற்பையும் இழக்கத் தொடங்கியது. போதிய திறமையுள்ள அதிகாரிகளை தேர்வு செய்ய இந்த தேர்வு முறை உதவாததே, தொடர்ச்சியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தூதாண்மையிலான பிரச்சனைகளுக்கு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆக பல அதிகாரிகள், இந்த தேர்வுமுறையை நீக்க வேண்டினர். 1905ஆம் ஆண்டில் ச்சிங் வம்ச அரசு நடைமுறையில் இருந்த அரசுப் பணிக்கான தேர்வுமுறையை நீக்கி அறிவித்தது. 1300 ஆண்டுகால தேர்வு வழிமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு பின், 1911ம் ஆண்டில் புரட்சி ஏற்பட்டு ச்சிங் வம்சகால அரசும் ஆட்சியிழந்தது.

இருப்பினும் தொடர்ந்த பல ஆண்டுகளில் கேஜு என்னும் தேர்வுமுறையின் பலம் மற்றும் பலவீனங்கள் வரலாற்று அம்சமாக, பேசப்பட்டன. சீன மக்களாட்சி புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் சுன் யாட் சென் அவர்கள், அவரது 5 ஆற்றல் அரசியலமைப்புச் சட்டத்தில், திற்மையானவர்களை தேர்ந்தெடுக்கும் உலகில் மிகச் சிறந்த, பண்டைய தேர்வு வழிமுறையாக கேஜு வழிமுறையை குறிப்பிட்டார். அவ்வளவு ஏன் மேற்கத்திய அறிஞர்கள் கூட இந்த கேஜூ தேர்வுமுறையை சீனாவின் ஐந்தாவது பெரிய கண்டுபிடிப்பாக போற்றினர். வெடிமருந்து, திசைகாட்டி, தாள் தயாரிப்பு, அச்சுக்கலை ஆகிய நான்கோடு கேஜு தேர்வுமுறையை ஐந்தாவது பெரிய கண்டுபிடிப்பாக அவர்கள் வர்ணித்தனர்.

அரசியலிலும், ராணுவ உத்திகளை தீட்டுவதிலுமான பேரளவு பங்களிப்பு நல்கியவர்களை வழங்கிய இந்த தேர்வுமுறை சீன வரலாற்றில் பெரும் பங்காற்றியது என்பதை நாம் மறுக்கவியலாது.


1 2 3