• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-19 10:26:29    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை அன்பான நேயர்களே! இன்றைய நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
தமிழன்பன் உங்களது கருத்துகளை நேயர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கெடுக்க சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றி எங்களுக்கு எழுதுங்கள்.
கலை நேயர்களே அருமையான திபெத் என்ற சுற்றுலா பொது அறிவுப் போட்டி முடிய இன்னும் 18 நாட்களே உள்ளன. உடனடியாக இணையதளம் மூலம் சரியான விடைகளை அனுப்பி உங்கள் பங்கேற்பை உறுதிபடுத்துங்கள்
தமிழன்பன் சரி இன்றைய நிகழ்ச்சிக்கு செல்வோமா?
கலை இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக இலங்கை மட்டகளப்பிலிருந்து து.பிரவீந்த் சீனப்பாடல் பற்றி எழுதிய கடிதம். சீனப்பாடல் நிகழ்ச்சி கேட்பதை நான் தவறவிடுவதில்லை. ஒவ்வொரு வாரமும் வேவ்வேறு தலைப்புகளில் பாடல்கள் வழங்கப்படுவது மிகவும் சிறப்பாக அமைகிறது. பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இதமாகவும் இனிமையாகவும் இருக்கின்றன. மேலும் சீனாவிலுள்ள ஹூங்பூ கலையை கற்றுக்கொண்டு அதில் தலைசிறந்த கலைஞனாக வளர விரும்புகிறேன். விரைவில் அதற்கான முயற்சிகளை எடுக்க இருக்கிறேன்.
தமிழன்பன் இராமபாளையம் இரா. கேசவன் சீன உணவரங்கம் பற்றி எழுதிய கடிதம். வாணியும் கிளிட்டஸூம் அறிவித்த இறால் பட்டாணி செய்வது பற்றி கேட்டேன். அதனை செய்வது பற்றி விபராமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியை விரும்பி இரசித்தேன். இத்தகைய அருமையான, சுவையான அசைவ சமையல் உணவு வகைகள் தமிழ் நாட்டிலுள்ள உணவகங்களில் தயாரிக்கப்படுமானால் அனைவரும் மிகவும் விரும்பி உட்கொள்ளப்படும் உணவு வகையாக மாறும் என்பதில் ஐயமில்லை.
கலை செந்தலை என்.எஸ். பாலமுரளி செய்திகள் பற்றி அனுப்பிய கடிதம். 2009 ஆம் ஆண்டு சீன பொருளாதார அதிகரிப்பு விகிதம் 8.4 விழுக்காடு இருக்கும் என்று சீனாவிலுள்ள ஐநா வளர்ச்சி திட்ட அலுவலகம் மதிப்பிட்டுள்ளது. இந்த ஐநாவின் அறிக்கை சிறப்பாகவும், சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விளக்குவதாகவும் அமைந்திருந்தது. மேலும் வெளிநாட்டு முதலீடும், சுற்றுலா மூலம் சீனாவுக்கு வரும் தொகையும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த துணையாக அமையும்.
தமிழன்பன் சீன மகளிர் நிகழ்ச்சி பற்றி சென்னை மறைமலைநகர் சி. மல்லிகா தேவி அனுப்பிய கடிதம். லீ இன மக்களின் கலையுணர்வுடன் கூடிய பூ வேலைப்பாடு குறித்து தெரிவித்த கருத்துக்கள் அருமை. லீ இன மகளிர் செய்யும் பூ வேலைபாடுகள் மிகவும் பிரபலம் என்பதையும், அக்கலையில் ஆர்வம் கொண்ட வஞ்சிங்மி அம்மையார் இந்த பூ வேலைபாடுகளை ஒரு வாரத்தில் கற்றுக் கொண்டதாகவும் அறிந்தேன். இந்த பூ வேலைப்பாடுகள் தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு ஜப்பானுக்கு அனுப்பப்படுவதை அறிந்தபோது இக்கலை தொடர்ந்து வளரும் என்ற எண்ணம் மேலோங்கியது. இந்த பூ வேலைப்பாட்டு பொருட்கள் அன்பளிப்பாகவும் அளிக்கப்படலாம் என்று கேட்டபோது பரிசுப்பொருட்களை போன்றே இந்த பூ வேலைப்பாட்டு பொருட்களும் அமைந்திருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.


கலை அறிவியல் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி புதுகை ஜி. வரதராசன் எழுதிய கடிதம். வேளாண் நிபுணர் யூங் லு பின் அவர்களின் வேளாண் உற்பத்தியில் நிகழ்த்திய சகாசம், நிகழ்த்த போகும் அதிசயங்கள் ஆகியவற்றை இந்த நிகழ்ச்சி விளக்கியது. மேம்பட்ட அறிவியல் தொழில் நுட்பத்தால் கலப்பின நெல் மூலம் 4.5 டன் விளைச்சல் அதிகரிக்க செய்யும் சாதனையை நனவாக்கப் போவதை அறிந்து அவரை வாழ்த்துகிறேன். இந்த வேளாண் சாதனை உணவில் தன்னிறைவு, உணவு பாதுகாப்பு, ஏழ்மை ஒழிப்பு போன்ற முயற்சிகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழன்பன் மதுரை அண்ணாநகர் என். இராமசாமி செய்தி தொகுப்பு குறித்து அனுப்பிய கடிதம். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப்பணி நடைமுறைப்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளுக்கு பின் சீன சமூகத்தின் பல்வேறு துறைகளிலும், தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமூகத்தின் உயர்வேக வளர்ச்சியுடன் சீனாவின் அரசியல் அமைப்பு சட்டம் ஏழு முறை திருத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டேன். காலத்திற்கேற்ற இந்த மாற்றங்களால் மேலும் நிதானமான வளர்ச்சியை சீனா பெற வழிகோலியுள்ளது. உயர்ந்த, செழுமையான அருமையான எதிர்காலம் மக்களின் வாழ்வில் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
கலை திமிறி எஸ். ஆதித்தியன் சீனாவின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் பற்றி எழுதிய கடிதம். பொருளாதாரா ஊக்குவிப்பு திட்டங்கள் மூலம் சீன அரசு மக்களுக்கு ஆக்கப்பணி பயன்பாடுகளை முன்னேற்றி உள்நாட்டு தேவைகைளை அதிகரிக்க செய்யும் முயற்சிகள் பலனளிக்கும் என்று சீர்திருத்த ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை வெளிநாடுகளின் சந்தையை கருத்தில் கொண்டு செயல்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் உள்ளூர் தேவைகளில் கவனம் செலுத்தி உள்ளூர் சந்தையில் அதிகளவு ஈடுபட இந்த ஊக்குவிப்பு திட்டங்கள் துணை செய்யும். இந்த திட்டங்களை இணையதளங்கள், தொலைக்காட்சி, வானொலி போன்ற பல்வேறு ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு தெரிவித்துள்ளது மக்களின் தகவல் பெறும் உரிமையை சீனா மதிப்பதையும் காட்டுகின்றது.

1 2 3