• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-19 10:26:29    
நேயர்களின் கருத்துக்கள்

cri

வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சிக் கேட்டேன். 2010 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி பற்றிய மேலதிகத் தகவல்களை மோகன் வழங்கினார். இத்தகைய தகவல்கள் மூலம், குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இணக்கம் மற்றும் நட்புறவை காட்டிய பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து, குவாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியும் மாபெரும் வெற்றிபெறும் என உறுதியாக நம்புகின்றேன். இப்போட்டி துவங்க இன்னும் ஓராண்டுக்கு மேலான காலம் இருக்கின்றபோதிலும், தன்னார்வத் தொண்டின் மீது அக்கறை செலுத்தும் குவாங்சோ நகர மக்களுக்கு எனது பாராட்டுக்கள்.
பாண்டிச்சேரி ஜி. ராஜகோபால்
பன்னாடுகளில் சளிக்காய்ச்சல் எ தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பற்றிய செய்தித்தொகுப்பு கேட்டேன். மெக்சிகோவில் தொடங்கி இது வரை 10 நாடுகளில் மனிதர்களுக்கு இந்த சளிக்காய்ச்சல் எ நச்சுயிரி பரவியுள்ளதும், மெக்சிகோ, அமெரிக்காவில் இந்த காய்ச்சலால் மக்கள் உயிரிழந்துள்ளதும் வருந்தத்தக்கது. உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையும், இக்காய்ச்சலை தடுக்க பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பயன்தர தொடங்கியுள்ளது. மெக்சிகோ அரசுக்கு 50 இலட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மனித நேய உதவி வழங்க சீன அரசு முடிவெடுத்துள்ளதை பாராட்டுகிறேன். சார்ஸ் நோயைச் சாமளித்த அனுபவங்களையும் சீனா மெக்சிகோவுக்கு வழங்க முன்வந்திருப்பது சீனாவின் மனித நேய உணர்வுகளை நினைவில் நிற்கச் செய்கிறது.

 
பாண்டிச்சேரி N.பாலகுமார்
இன்றைய திபெத் நிகழ்ச்சியில் திபெத்தில் உள்ள புத்த துறவிகள் செய்யும் அன்றாட பணிகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தனிப்பட்ட பணிகள் என்றில்லாமல், சாதாரண மனிதர்களை போலவே, புத்த துறவிகளும் பணிகள் செய்துவருவதை அறிந்தேன். எப்போதுமே ஒரு நிலப்பகுதிக்குள் வாழும் மக்களை ஒருங்கிணைப்பதிலும், அவர்களோடு இணைந்துவாழ்வதிலும் புத்த துறவிகள் சிறந்த உதாராணமாக திகழ்கிறார்கள்.
விஜயமங்கலம் குணசீலன்
சீன பொருட்கள் என்றாலே இந்தியர்களுக்கு ஒருவித ஈர்ப்பு உண்டு. அதிலும் சீருந்து என்றால் சொல்ல வேண்டியதில்லை. சீருந்து வாங்குவதில் தனி ஆர்வம் கொண்டுள்ள இந்தியர்கள் சொகுசு சீருந்தில் இன்பப் பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆகவே சீன சீருந்துகளுக்கு இந்தியாவில் என்றுமே வரவேற்பு இருக்கும். இந்திய சந்தையில் சீனா சீருந்துகளின் தேவை முக்கிய இடம்பெறும். இத்துறை பற்றி தெரிவித்த சீன வானொலிக்கு நன்றிகள்


1 2 3