தமிழன்பன் ஜெயங்கொண்டம் கி. இரவிசந்திரன் நேருக்கு நேர் நிகழ்ச்சி பற்றிய எழுதிய கடிதம். தர்மபுரி எஸ். பாரதி அவர்களின் நேர்முகம் கேட்டேன். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி சீன மொழி கற்றுக்கொள்வதற்கு வசதியாக உள்ளதையும், கருத்தரங்குக் கூட்டத்தில் குறைவான எண்ணிக்கையில் நேயர்கள் கலந்து கொண்ட நிலைமாறி இப்போது நுற்றுக்கணக்கானோர் கலந்து கொள்வது தமிழ்ப்பிரிவின் வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தது முற்றிலும் உண்மை. நேயர்களின் பங்கேற்புகள் மேலும் வளர ஆவன செய்வது சிறந்தது. கலை பவித்திரம் புதூர் ஜெ. பார்த்தசாரதி உலக எயிட்ஸ் விழிப்புணாவு குறித்து தெரிவித்த கருத்துக்கள். அன்றைய கட்டுரையில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்றாட சமூகத்தில் இயல்பாக வாழ்வதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயம் என்பதை அறிந்து கொண்டேன். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி நமது நட்பை ஆதரவாக்கும் போது அவர்களும் சமூகத்தோடு இணக்கமான வாழ்க்கை வாழ்வது சாத்தியமாகும். தமிழன்பன் தேவனூர் ப. ஜோதி லெட்சுமி சீனக் கதை நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீன பேரழகிகளை பற்றியும் அவர்களது வாழ்க்கை முறைகள் பற்றியும் சீனக்கதை நிகழச்சி மூலம் அறிய முடிந்தது. ஒரு நாட்டை கைப்பற்ற படைகள் மற்றும் ஆயுதங்கள் தேவைப்படும் என்று நினைத்தேன். அழகிகளை எதிரி நாட்டு அரசனிடம் அனுப்பி நாட்டை வெல்லக்கூடிய போர்தந்திர குணம் முற்காலத்தில் இருந்துள்ளது என்னை வியப்பில் ஆழ்த்தியது. இத்தகைய உண்மைகளையும், பழமையான பழக்கவழக்கங்களையும் எடுத்துக்கூறிய வித்தியாசமான கதை. பாராட்டுக்கள். கலை இலங்கை காத்தான் குடியிலிருந்து பாத்திமா றிப்னா அனுப்பிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். நேயர் விருப்பம், தமிழ் மூலம் சீனம், நட்புப்பாலம், மலர்ச்சோலை, நேயர் நேரம் ஆகிய நிகழ்ச்சிகள் யாவற்றையும் விரும்பி கேட்கின்றேன். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி சீன மொழியை அறிமுகப்படுத்தும் அருமையான நிகழ்ச்சியாக வலம் வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு இன்னும் ஓரிரு நாட்கள் அதிக நேரம் ஒதுக்கி ஒலிபரப்பினால் கூட நேயர்கள் பலரும் பயனடைவார்கள் என்று நம்புகிறேன். அறிவார்ந்த கருத்துகளை நாளும் உலக மக்களுக்கு செந்தமிழில் வழங்கிவரும் சீன வானொலிக்கு எனது பாராட்டுக்கள்.
மின்னஞ்சல் பகுதி முனுகப்பட்டு -பி.கண்ணன்சேகர் மறுமலர்ச்சி அடைந்துள்ள சிச்சுவான் என்ற சிறப்பு நிகழ்ச்சி கேட்டேன். கடந்த ஆண்டு மே திங்கள் 12 ஆம் நாள் உலகையே அதிரச்செய்த சிச்சுவான் நிலநடுக்கம் காரணமாக, சிச்சுவான் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களும், உடமைகளும் அழிந்துபோனது. ஆயினும் சீன அரசின் அவசர நடவடிக்கைகளால் மேற்கொள்ளப்பட்ட மீட்புதவிப் பணிகளும், மறுசீரமைப்புப் பணிகளும் சிச்சுவான் பிரதேசத்தை முன்பைவிட புதுபொலிவாக உருவாக்கி வருவதை, அங்கு வாழும் மக்கள் மட்டுமின்றி, உலகமே பாராட்டுகிறது. பலரின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு தலைகீழ் மாற்றங்கள் உருவாகியிருப்பது இதற்கு சிறந்த சாட்சியாகும். அரசின் உதவியோடு புதுவாழ்வு பெற்ற ஒரு முதியவர் குடும்பம் தங்களது மகிழ்ச்சியை வெளியிட்டிருப்பது கேட்டு நான் பெருமிதம் அடைந்தேன். எளிய முறையில் இருந்த அவர்களது வீடு நிலநடுக்கத்தால் அழிந்ததால், அதை விட வசதியான வீட்டை அரசு கட்டி கொடுத்துள்ளது. மேலும் நல்ல வருமானம் வரும் வகையில் அரசு வேலைவாய்ப்பையும் வழங்கியிருப்பது, மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்பெற செய்திருக்கிறது. அதேநேரத்தில் மாணவர்களின் கல்வியை செம்மைப்படுத்தவும் அரசு கட்டியுள்ள புதிய பள்ளிகளில், உடல் நலம், மனநலம் ஆகியற்றை மேம்படுத்தும் வகுப்புகள் அறிமுகமாகியிருப்பது பாராட்டுக்குரியது.
1 2 3
|