திறமைகள் பிறர்காய்


எண்ணெய் கலந்த வண்ணத்தால் வரைந்த ஓவியம் ஒன்று 11,37,062 அமெரிக்க டாலர் தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. ரஷிய தலைமை அமைச்சர் விலடிமிர் புத்தின் தான் அந்த ஓவியத்தை வரைந்தவர். அதன் மூலம் கிடைத்த தொகை அறகொடை பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. ரஷிய நாட்டின் குடிசை ஒன்றின் உள்ளே பூ வேலைப்படுகள் கொண்ட திரைசீலை தொங்கவிடப்பட்டுள்ள பனி படர்ந்த சன்னல் ஓவியம் தான் அது. புத்தின் இதனை வரைய அரை மணிநேரத்திற்கு குறைவாகவே எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதில் தொழில்முறை ஓவியர் ஒருவர் சில சிறிய மாற்றங்களை மட்டுமே மேற்கொண்டார். தனது ஓவிய திறமையை அறப்பணிகளுக்கு உதவ பயன்படுத்தி இருப்பது, நமது திறமைகள் பிறரை வாழவைக்கவே என்று குறிப்பாக உணர்த்துகிறதல்லவா.
1 2 3
|