• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-21 11:53:53    
இயன்ற உதவி

cri

வயதான கடல்நண்டு

140 வயதானதாக எண்ணப்படும் கடல் நண்டு ஒன்று நியூயார்க் மாநகரிலுள்ள உணவகம் ஒன்றிற்கு புகழ் சேர்க்கும் சின்னமாகியுள்ளது. 9 கிலோ எடையுடைய இந்த கடல் நண்டு கனடாவின் நியூபவுண்டலாண்டில் பிடிக்கப்பட்டு நியூயார்க் கொண்டுவரப்பட்டது. மிக பெரிதாக இருந்ததால் நன்மையை கொண்டு வரும் சின்னமாக நினைத்து உணவகத்தினர் அதனை வாங்கினர். அவர்கள் எண்ணியது போலவே மக்களும் அதற்கு முன்னால் நின்றுகொண்டு நிழற்படம் எடுத்து இன்புற தொடங்கினர். விளைவு, உணவகத்திற்கு நற்பெயர் கிடைக்க தொடங்கியது. அந்த உணவகத்திற்கு மக்களின் சிறப்பு கவனத்தை ஈர்த்த அந்த கடல் நண்டை கொல்ல அவர்கள் விரும்பவி்லலை. எனவே கடல் நண்டுகளை பிடிக்க தடைசெய்யப்பட்டுள்ள Kennebunkport கடலில் விட்டுவிடவுள்ளனர். கடல் நண்டுகளின் வயது எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா? அதாவது ஒரு பவுண்ட் எடை கொண்ட கடல் நண்டு 7 முதல் 10 வயது வரையிருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. 454 கிராம் தான் ஒரு பவுண்டு எடையாகும்.


1 2 3