• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-02 10:26:25    
சீன அரசின் உதவிகள்

cri
தற்போது, உலக நிதி நெருக்கடியால், வெளிநாட்டுச் சந்தையின் தேவைகள் குறைந்து வருகின்றன. சீன பொருளாதார அதிகரிப்பும் இதனால் பாதிக்கப்படுகின்றது. இந்நிலைமையில், சீனாவின் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் இயங்குவது கடினமாகியுள்ளது. அவற்றின் நிதி திரட்டல் மற்றும் தொழில் நுட்பத்தின் சீர்திருத்தத்துக்கு உதவி செய்ய, சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே, இந்த தொழில் நிறுவனங்களின் சிக்கல்கள் படிப்படியாக தணிவடைந்து வருகின்றன.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், சுமார் 60 விழுக்காட்டை இத்தகைய தொழில் நிறுவனங்கள் வகிக்கின்றன. ஏறக்குறைய 80 விழுக்காட்டு வேலை வாய்ப்புகளை, அவை வழங்குகின்றன. 2008ம் ஆண்டின் பிற்பாதியில், நிதி திரட்டலில் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் மேலும் மோசமாகியது. எனவே, அவற்றுக்கு உதவும் நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ள தொடங்கியது. இத்தகைய உதவி நடவடிக்கைகள், தொழில் நிறுவனங்களுக்கு வளர்ச்சி வாய்ப்புக்களை கொண்டு வருகின்றன. சுங்சின் மாநகரில் இயந்திர தயாரிப்புத் தொழில் நிறுவனம் ஒன்று, நிதி பற்றாக்குறையில் சிக்கியது. அங்குள்ள நம்பிக்கை உத்தரவாதம் செய்யும் நிறுவனத்தின் மூலம், இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது என்று இந்த தொழில் நிறுவனத்தின் மேலாளர் து சியாங் சின் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:

நம்பிக்கை உத்தரவாதம் செய்யும் நிறுவனம் மூலம், எங்களது நிறுவனம் 4 இலட்சம் யுவான் நிதியுதவியை பெறுகின்றது. எனவே, நிதி நெருக்கடி பிரச்சினையால், எமது உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்றார் அவர்.

நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியை, நடுவண் மற்றும் பிரதேச அரசுகள் நீக்கியுள்ளன. அதனால், இத்தகைய தொழில் நிறுவனங்களின் நிர்ப்பந்தங்கள் குறைந்துள்ளன. மேலும், தொழில் நிறுவனங்களின் வருமான வரி, மதிப்புக் கூட்டு வரி முதலியவற்றையும் சீனாவின் பல்வேறு அரசுகள் குறைத்துள்ளன.

அதேவேளையில், இத்தகைய தொழில் நிறுவனங்கள் தொழில் நுட்பத்தின் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு உதவி செய்து, அவற்றின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், குறிப்பிட்ட நிதி உதவியையும் சீன அரசு வழங்கி வருகிறது. இத்தகைய தொழில் நிறுவனங்களின் மேலாண்மை கட்டமைப்பை சீரமைத்து, சந்தையில் போட்டியாற்றலை அதிகரிப்பதற்கும் சீன அரசு ஆதரவளிக்கின்றது. சீன தொழிற்துறை மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் லி யி சௌ கூறியதாவது:

தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூகத்தை பொறுத்தவரை, தொழில் நுட்பச் சீர்த்திருத்தம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.

1 2 3