• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-02 10:26:25    
சீன அரசின் உதவிகள்

cri

அண்மையில், நாடு மற்றும் மக்களுடன் நெங்கிய தொடர்புகொண்ட தொழில் நிறுவனங்களுக்கு சீன அரசு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கிவைத்துள்ளது. இன்னல்களை எதிர்நோக்குகின்ற நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள், வட்டியில் சலுகை பெறுகின்றன. பரிசீலனை செய்யப்பட்ட தொடர்புடைய திட்டப்பணிக்கு, ஆயிரத்து ஐ நூறு கோடி யுவான் மதிப்புள்ள சிறப்பு தொழில் நுட்ப புனரமைப்பு நிதியை, சீன தொழில் துறை மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் வினியோக்கிறது.

தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளித்து, பொருளாதார அதிகரிப்பை மேம்படுத்துவதற்கு மட்டுமல்ல, கட்டமைப்பை சீரமைப்பதன் மூலம், பொருளாதார அதிகரிப்பு முறையை இத்தகைய தொழில் நிறுவனங்கள் சரிப்படுத்துவதற்கும், தொழில் நுட்பச் சீர்திருத்தத்தில் ஈடுபடுவது முக்கியமானது என்று லி யி சௌ தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:

தற்போது, சர்வதேச அளவில், மூலப் பொருட்கள் மற்றும் சாதனங்களின் விலை பெரிதும் குறைந்துள்ளது. பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கும்போது, தொழில் நுட்பச் சீர்திருத்தத்தை மேற்கொண்டால் தான், இலாபம் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

இந்த சலுகைகளோடு, கடந்த ஆண்டில், 4 இலட்சம் கோடி யுவான் மதிப்புள்ள முதலீட்டுத் திட்டத்தை சீன அரசு நடைமுறைப்படுத்த துவங்கியது. நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தால் நலன்களைப் பெறும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த திட்டப்பணி, மக்களுடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் அடிப்படை வசதிகளுக்கான திட்டப்பணியாக இருப்பதே அதற்கு காரணமாகும். சீன தேசிய தகவல் மையத்தைச் சேர்ந்த பொருளாதார மதிப்பீட்டு வாரியத்தின் முதன்மை பொருளியலாளர் சௌ பாவ் லியாங் கூறியதாவது:

உள்நாட்டுத் தேவையை நாங்கள் முழுமூச்சுடன் விரிவாக்கி வருகின்றோம். நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் வளர்வதற்கு இது உதவி செய்கிறது என்று அவர் கூறினார்.

1 2 3