 சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத்திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்துள்ள கடந்த 30 ஆண்டுகளில், சுறுசுறுப்பான வர்த்தகத்தின் தூண்டுதலுடன், Zhe Jiang மாநிலத்தின் யீவு நகரில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிகமானோர் வெளியூர்களிலிருந்து யீவு நகருக்கு வந்துள்ளனர். யீவு நகரில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்களில் ஒன்று இதுவாகும்.

வெளியூரிலிருந்து யீவு நகருக்கு வந்து பணி புரியும் மக்கள், "புதிய யீவு குடிமக்கள்" என அழைக்கப்படுகின்றனர். யீவு நகரில், உள்ளூர் மக்கள் தொகை சுமார் 8 லட்சமாகும். பதிவு செய்யப்பட்டுள்ள"புதிய யீவு குடி மக்களின்" எண்ணிக்கை, பத்து லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனர்களைத் தவிர, வெளிநாட்டவர், "புதிய யீவு குடிமக்களில்" அதிகமாக இருக்கின்றனர். யீவுவில் தயாரிக்கப்படும் பொருட்கள், மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய பிரதேசங்களில் நன்றாக விற்பனை ஆவதால், யீவுவில் வாழும் வெளிநாட்டவர்களில், அதிக பகுதியினர், இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களாகவுள்ளனர். யீவுவில் அவர்களின் பணி மற்றும் வாழ்க்கை பற்றி அறி்ந்து கொள்ளும் வகையில், எமது செய்தியாளர், யீவு நகரில் உள்ள மிகப் பெரிய மசூதிக்கு சென்று, மசூதி வாயிலில் துருக்கி நாட்டவர் Bakir Ceylanஐச் சந்தித்தார்.
1 2 3
|