
Bakir Ceylan, துருக்கியின் Istanbul நகரத்தைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற பின், வெளிநாட்டு வர்த்தகப் பணியில் அவர் ஈடுபட்டு வருகின்றார். 2001ஆம் ஆண்டு, ஒரு துருக்கி வர்த்தக நிறுவனத்தின் பிரதிநிதியாக, அவர் ஹாங்காங்கிற்கு அனுப்பப்பட்டார். இதற்கு பிந்தைய 4 ஆண்டுகளில், அவர் சீனப் பெருநிலப்பகுதியின் பல இடங்களுக்குச் சென்றார். அவர் யீவுக்கு பல முறை வந்துள்ளார். யீவு நகரில் முதலீடு செய்து, வணிகம் செய்யும் சூழல் மேம்பட்டு வந்ததைத் தொடர்ந்து சொந்தமாக தொழில் நடத்த Bakir Ceylan தீர்மானித்தார். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன், யீவு நகரில் கூட்டு நிறுவனம் ஒன்றை அவர் ஆரம்பித்தார்.
1 2 3
|