
Bakir Ceylanஇன் கூட்டு நிறுவனம், வர்த்தகம் தொடர்பான ஆலோசனைச் சேவையை முக்கியமாக வழங்குகின்றது. நாள்தோறும், Bakir Ceylanவின் வழிகாட்டலுடன், வாடிக்கையாளர்கள் யீவு நகரின் சந்தைகளில் பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர். தொடர்புடைய ஒப்பந்தத்தை உருவாக்குவதில் வாடிக்கையாளர்களுக்கு Bakir Ceylan உதவி செய்கிறார். இதற்கிடையில், சரக்குப் பொருட்களின் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் சுங்க துறை தொடர்பான நடைமுறைகள் முதலியவற்றுக்கு அவரது நிறுவனம் பொறுப்பேற்கின்றது. Bakir Ceylan கூறியதாவது:
"வர்த்தகத்தின் முழுப் போக்கிற்கான ஏற்பாடுகள் செய்து தருகின்றோம். முதலில் சரக்குப் பொருட்களை எங்கள் கிடங்கில் வைத்து, தரச் சோதனை நடத்துகின்றோம். பொருட்களின் தரம் வரையறைக்கு ஏற்றதாக இருந்தால், அவற்றை கொள்கலனில் வைத்து, சுங்கத்துறை நடைமுறைகளை நிறைவேற்றி, வாடிக்கையாளர் குறிப்பிட்ட இடத்துக்கு அவற்றை அனுப்புவோம்" என்றார், அவர். 1 2 3
|