இவ்வாண்டு, சீன-சிங்கப்பூர் பொருளாதாரத் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டமான சியங் சு மாநிலத்தின் சூ ச்சோ தொழிற்துறை தோட்டம் நிறுவப்பட்ட 15ம் ஆண்டாகும். இங்குள்ள வெளிநாட்டுக் கூட்டு முதலீட்டு தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கை 1400ஐ தாண்டியது. அவற்றில் பாதிக்கு மேல், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழில்நிறுவனங்கள் தான். முழு உலகம் நிதி நெகுக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில், சு ச்சோ தொழிற்துறை தோட்டமும் அந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியவில்லை. குறிப்பாக, ஏற்றுமதி தொழில்நிறுவனங்கள் பொருளாதார குளிர்காலத்தில் மிகவும் அல்லல்படுகின்றன என்று சூ ச்சோ தொழிற்துறை தோட்டத்தின் பொறுப்பாளர் ma minglong கூறினார்.
இங்குள்ள 60 விழுக்காடு உற்பத்தித் தொகை, தகவல் தொடர்பு தொழிலிலிருந்து வருகின்றது. முன்பு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் மிக அதிகமாக இருந்ததால், தற்போதைய சர்வதேச சந்தை நிலவரம் எங்களை பெரிதும் பாதிக்கிறது. கடந்த ஆண்டின் நவம்பர் முதல், நிதி நெருக்கடியினால் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகியுள்ளது. அதற்குப் பின், எங்களது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத் தொகை குறைய துவங்கியது என்று அவர் கூறினார்.
1 2 3
|