
லீ சுவாய் என்பவர் சீனாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஹு பெய் மாநிலத்தைச் சேர்ந்தவராவார். இவ்வாண்டு அவருக்கு 20 வயதாகிறது. ஒரு வறிய கிராமக் குடும்பத்தில் மேலண்ணப் பிளவு குறைபாட்டுடன் பிறந்த அவர், துயரத்தில் சிக்கி இருந்தார். தாழ்வு மனப்பான்மையுடன் உயர் நிலை பள்ளிக் கல்வியைத் தொடர விரும்பாமல் நின்றுவிட்டார். அதிருஷ்டமாக, புன்னகை தொடர் வண்டி எனும் திட்டப்பணி அவருக்கு இலவச அறுவை சிகிச்சை வாய்ப்பை வழங்கியது. அவரது வாழ்க்கை அப்போது முதல் மாறியது. லீ சுவாய் கூறியதாவது
புன்னகை தொடர்வண்டி திட்டப்பணியின் நிதியுதவியுடன், இலவச அறுவை சிகிச்சை பெற்றேன். அதற்குப் பின், பிறருடன் என்னால் சாதாரணமாக உரையாட முடிந்தது. படிப்படியாக தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் ஊக்கத்துடன் பள்ளிக்குத் திரும்பினேன். 2008ம் ஆண்டு, தேர்வு மூலம், ஹு பெய் yunyang மருத்துவக் கல்லூரியின் மாணவராக சேர்க்கப்பட்டேன். ஒரு உண்மையான மருத்துவராக மாற வேண்டும் என்று விரும்புகின்றேன். எனது அறிவை பயன்படுத்தி மேலும் அதிகமானனோர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, அவர்களை புன்சிரிப்போடு இருக்கச் செய்யப் பாடுபடுவேன் என்று அவர் கூறினார்.

சீனாவின் மக்கள் தொகையில் ஆயிரத்துக்கு 1.6 பேர் மேலண்ணப் பிளவு குறைபாடு கொண்டுள்ளனர். சராசரியாக ஆண்டுக்கு 25 ஆயிரம் குழந்தைகள் மேலண்ணப் பிளவு குறைபாட்டுடன் பிறகின்றனர். அவர்களில் பெரும்பாலானோரைப் பொறுத்த வரை குறைந்தது ஒரு தடவை அறுவை சிகிச்சை பெற வேண்டும். ஆனால், வறுமையின் காரணத்தால், பலர் சிகிச்சை பெற முடியாது.
1 2 3
|