• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-18 12:33:02    
அழகு பன்றி

cri

அழகு பன்றி

சீனாவின் குவாங்துங் மாநிலத்தின் Shantou வில் பாரம்பரிய போட்டி ஒன்று நடைபெற்றது. அழகு பன்றி போட்டி தான் அது. பன்றிகளை அழகுபடுத்தி அவற்றை நடக்கவிட்டு அல்லது ஓடவிட்டு நடத்தப்படும் போட்டி என்று நினைக்க வேண்டாம். கொல்லப்பட்ட பன்றிகளை மிக அழகாக அலங்காரம் செய்து மக்கள் வரிசையாக வைப்பர். அதிக எடை கொண்ட, மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்ட பன்றி தான் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த பன்றியை குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் விருந்துண்டு மகிழ்வர். இது மிங் வம்ச காலத்தில் கிராமப்புற பாரம்பரிய விழாவாக இருந்தது. பன்றிகளை பலியிட்டு, பெறும்பேறு கிடைக்கவும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் கிராம மக்கள் கடவுளிடம் இறைவேண்டல் செய்யும் விழாவாக அது இருந்தது.

1 2 3