• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-19 11:37:53    
திபெத் மொழியின் மாபெரும் வளர்ச்சி

cri

சீனாவின் திபெத் தேசிய இன மக்கள், தங்களுக்கென மொழிகளையும் எழுத்துக்களையும் கொண்டுள்ளனர். திபெத் தேசிய இன மக்கள் தங்களின் மதம், பொருளாதாரம், பண்பாடு, அரசியல், சமூக வாழ்க்கை முதலிய பல்வேறு துறைகளில் திபெத் எழுத்துக்கள் விரிவான முறையில் துவக்கத்திலிருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். திபெத் தேசிய இனப் பண்பாட்டைப் பரப்பி கையேற்றவும், திபெத் தேசிய இனத்தின் வளர்ச்சிக்கும் திபெத் மொழி, மிக முக்கிய பங்காற்றியுள்ளது. சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள 90 விழுக்காட்டு மக்கள், திபெத் தேசிய இனத்தைச் சேர்ந்தவராவர். இங்கு, திபெத் மொழி தான், பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அறிவியல் தொழில் நுட்ப புதுமைகளாலும், கல்வி முன்னேற்றத்தாலும், திபெத் மொழி பயன்பாடு, இடைவிடாமல் வளர்ந்து, புத்துயிர் பெற்று வருகின்றது.

இப்போது, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், திபெத் மொழி வானொலி ஒலிபரப்பும் திபெத் மொழி தொலைக்காட்சியும், உள்ளன. திபெத் தேசிய இன மக்கள், திபெத் மொழியிலான செல்லிட பேசியை தான் பயன்படுத்துகின்றனர். சீன தொலைபேசி குழுமத்திலுள்ள திபெத் கூட்டு நிறுவனத்தின் துணைப் பொறியியலாளர் Nyima Dondrup கூறியதாவது

தொலைபேசி விவசாயிகள் மற்றும் ஆயர்களின் அடிப்படை தொலைத்தொடர்பு சேவையை நிறைவேற்றுவதால், அவர்கள், மகிழ்ச்சியடைகின்றனர். இதற்கு மிகவும் நன்றியறிதலுடன் இருக்கின்றனர். அத்துடன், செல்லிட பேசியின் மூலம், குறுந்தகவல்கள் அனுப்ப அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், சந்தையில், சீன மொழியிலான செல்லிட பேசி தான் விற்பனை செய்யப்பட்டது. சீன மொழி அவர்களுக்குத் தெரியாது. எனவே, 2004ம் ஆண்டின் இறுதியில், திபெத் மொழியிலான செல்லிடபேசியை உருவாக்க ஆய்வுக் குழுவை ஏற்படுத்தினோம்.

1 2 3