• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-19 11:37:53    
திபெத் மொழியின் மாபெரும் வளர்ச்சி

cri

திபெத் மொழியின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. 2004ம் ஆண்டு, திபெத் மொழியில் மென்பொருட்கள் தயாரிக்க, 3 கோடியே 30 இலட்சம் யுவானை சீன அரசு ஒதுக்கியது. 2007ம் ஆண்டு, திபெத் மொழி மென்பொருள் சீனத் தேசிய தகவல் தொழிற்துறையின் தரச் சோதனையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தகவல் மயமாக்கும் காலத்தில், திபெத் மொழியின் கையேற்றம், பரவல், வளர்ச்சி ஆகியவற்றுக்கு, இது மிகச் சிறந்த மேடையை வழங்கியது.

திபெத் மொழி வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, நவீன பாதையில் நடைபோடும் அதே வேளையில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசு, திபெத் மொழி கல்விப் பணிக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தது. திபெத்திலுள்ள துவக்க பள்ளிகளிலிருந்து மேனிலை பள்ளிகள் வரை, திபெத் மொழிப் பாடங்கள் உள்ளன.

திபெத் மொழியின் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் மேலும் பயனுள்ள முறையில் முன்னேற்ற, திபெத் தன்னாட்சிப் பிரதேசம், திபெத் மொழியில் எழுதப்பட்டிருந்த நூல்களை மொழிபெயர்த்து, வெளியிட்டது. இதனால், திபெத் மொழியும் எழுத்துக்களும், மக்களால் பரந்த அளவில் கற்றுக்கொள்ளப்பட்டன. பயன்பாடுகள் உயர்ந்தது. இவ்வாறு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. திபெத் தேசிய இன மக்கள், தமது மொழியையும் எழுத்துக்களையும் பயன்படுத்தும் உரிமையை முழுமையாக அனுபவிக்கின்றனர்.


1 2 3