 சீன இராணுவ வாகனம்
போர் வீரர்கள் என் பொருள்படுகின்ற Mengshi இராணுவ வாகனம் சீனாவின் Dongfeng வாகன நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றது. இது, அமெரிக்காவின் Humvee இராணுவ வாகனத்தை விட அதிகளவு வெற்றிபெற்றுள்ளதாக அதனுடைய தலைமை வடிவமைப்பாளர் Huang Song தெரிவித்தார். சீன இராணுவத்தின் முக்கிய போர்கள செயல்பாடுகளின் 12 அம்சங்களில் இது Humvee யை விட மேம்பட்ட முறையில் பயன்பட்டுள்ளது. சரக்கேற்றும் அளவு மற்றும் எண்ணெய் செலவு உள்ளிட்ட 12 அம்சங்களில் Mengshi, Humvee யை விட சிறப்பாக உள்ளது. மேலும் மூன்று அம்சங்களில் Humvee க்கு இணையாக செயல்படுகின்றது. வான்குடை மூலம் இறக்கப்படுவது, கடல் மட்டத்தைவிட 33 ஆயிரம் அடி உயரத்திலுள்ள இடங்கள், அதிக வெப்பம் மற்றும் குளிரான வானிலை உள்ளிட்ட சுற்றுச்சூழல் மற்றும் நிலவியல் சோதனைகளிலும் Mengshi இராணுவ வாகனம் வெற்றியடைந்துள்ளது. 2008 ஆண்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான விருது இதற்கு கிடைத்தது.
1 2 3
|