நிதி நெருக்கடி உதவி



அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் யாரும் அறியாத நபர் ஒருவர் அனைவருக்கும் டாலர் பணநோட்டுகளை நன்கொடையாக அளித்தார். நிதி நெருக்கடியின் போதான உதவி என்று மட்டுமே அறியப்பட்ட அவர் நூற்றுக்கணக்கான பேருக்கு பண உதவி வழங்கினார். நிதி நெருக்கடிக்கு உதவி என்று எழுதியிருந்த இடத்தில் சென்று தங்களுடைய பிரச்சனைகளை கூறியவர்கள் 50 டாலர் மற்றும் அதற்கு மேலும் உதவி பெற்றனர். முன்னாள் ஈராக் போர் வீரர் என்று தெரிவித்து தனது பிரச்சனையை எடுத்து கூறியவர் 100 டாலரையும், தனது தாயார் இறக்கும் தருவாயில் உள்ளதாக கூறியவர் 150 டாலரையும் உதவியாக பெற்றனர். நியூயார்க் நகரில் இரண்டு நாட்கள் பணம் வினியோகித்த அவர் வாஷிங்டன், பாஸ்டன் மற்றும் பிலடெல்பியா ஆகிய நகரங்களில் மொத்தமாக ஐந்து இலட்சம் டாலர்கள் வழங்கபோவதாக அவருடைய பேச்சாளர் Drew Tybus தெரிவித்தார்.
1 2 3
|