கடந்த சில ஆண்டுகளாக, புதிய எரியாற்றல் துறையை வளர்ப்பது, பல்வேறு நாடுகளின் முக்கிய உத்திநோக்காக மாறியுள்ளது. குறிப்பாக சர்வதேச நிதி நெருக்கடி தொடர்ந்து பரவியதன் பின்னணியில், பொருளாதார மறுமலர்ச்சியை முன்னேற்றும் முக்கிய நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது. பல்வேறு கொள்கைகளின் ஆதரவுடன், சீனாவின் புதிய எரியாற்றல் தொழில் மென்மேலும் விரைவாக வளர்ந்து வருகிறது.
அண்மையில் நடைபெற்ற ஒரு பொருட்காட்சியில், சீன ஜியங் சு மாநிலத்தின் ai te fu தொழில்நிறுவனம் தற்சார்பாக வடிவமைத்து தயாரித்த புதிய வகை மிதி வண்டி, பல மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொருட்காட்சியில் 17 நாடுகளின் வணிகர்கள், 20 ஆயிரத்திற்கு மேலான மிதி வண்டிகளை வங்கும் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர். இந்த மிதி வண்டி இயங்க பொருத்தப்பட்டுள்ள மாசுபாட்டை ஏற்படுத்தாத மென்னிய மின்கலம், அதிக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான காரணமாகும். குறைந்தளவு எடையுள்ள இந்த மின்கலம், அதன் பயன்பாட்டு காலம் முடிந்த பின்னர், தாவரங்களுக்கு உரமாக மாற்றப்பட முடியும். சீன அரசின் ஆதரவுக் கொள்கையால், இந்த மின்கலம் ஆய்வகத்திலிருந்து உற்பத்திக்கு வருகிறது. ai te fu தொழில்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் shen kaicheng கூறியதாவது,
இந்த புதிய மின்கல ஆய்வுக்கு எங்கள் தொழில் நிறுவனம் சுமார் 6 கோடி யுவான் ஒதுதீடு செய்தது. அதில் சுமார் 3 கோடி யுவான், அரசு வழங்கிய மானிய தொகை தான் என்று அவர் குறிப்பிட்டார்.
1 2 3
|