எண்ணெய், நிலக்கரி முதலிய பாரம்பரிய எரியாற்றல், குறைந்து வருகின்றன. எனவே சீனா, பிற நாடுகளைப் போல், புதுப்பிக்கவல்ல எரியாற்றலின் வளர்ச்சியை விரைவுப்படுத்தியுள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன், சீனா தொடரவல்ல மூலவள சட்டத்தை வெளியிட்டது. சூரிய ஆற்றல், காற்றாற்றல் முதலியவை, எரியாற்றல் வளர்ச்சியில் முன்னுரிமையுடன் வளர்க்கப்படும் துறைகளாக வகுக்கப்பட்டன. தொடர்புடைய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழிலின் வளர்ச்சிக்கு சீன அரசு நிதி ஆதரவு அளிக்கிறது. இக்கொள்கைகளின் ஆதரவுடன், சீனாவின் புதிய எரியாற்றல் தொழில் பாய்ச்சல் முன்னேற்றமடைந்து வருகிறது. காற்றாற்றல் மின்னாக்கி அளவு, தொடர்ந்து 3 ஆண்டுகளாக, 2 மடங்கு என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது. அணு மின்சாரக் கட்டுமானம் குறிப்பிட்டளவில் விரைவாகியுள்ளது. எனவே, புதிய எரியாற்றல், சமூக முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தும் துறையாக மாறியுள்ளது.
1 2 3
|