• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-29 15:13:10    
உரம் செய்ய விரும்பு

cri

இன்றைய உலகில் பல்வேறு பிரச்சனைகள் பேசப்பட்டாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் ஆகியவை மிக முக்கியமாக விவாதிக்கப்படுகின்றன. இந்த இரண்டு பிரச்சனைகளும் அரசு மற்றும் பெரிய நிறுவனங்களோடு மட்டும் தொடர்புடையவை அல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் இதில் பங்குண்டு. இயற்கையை பாதுகாப்பதில், மரங்களை நட்டு வளர்ப்பதில் நமது பங்களிப்பை செய்ய வேண்டிய கடமை நம்மனைவருக்கும் உள்ளது. குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நமது வீட்டிலிருந்தே தொடங்குகிறது. எனது வீட்டு குப்பைகள் எனது முற்றத்தை தாண்டிவிட்டால் போதும் என்ற எண்ணம் தன்னலமிக்கது. அந்த குப்பைகளால் அடுத்தவருக்கு சிக்கல்கள் ஏற்படாதவாறு பார்த்து கொள்வதும் நமது கடமை தானே. நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து சேர்க்கப்படும் குப்பைகள் நகருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் இடங்களில் கொட்டப்படுவது தான் இன்றைய வாடிக்கை. திறந்தவெளியில் கொட்டப்படுவதால் அதிலிருந்து பரவுகின்ற நச்சுயிரிகள் அப்பகுதி மக்களின் உடல் நலத்திற்கு கேடாகிறது. நாம் அப்பகுதியை கடந்து செல்லும்போது துர்நாற்றத்தில் முகம் சுளிக்க அங்குள்ளவர்களோ அந்த கெட்ட வாடைக்கு பழகியவர்களாய் வாழ்கின்றனர். அவற்றை அவ்வப்போது எரிப்பதாலும் அதிக கரி காற்றில் கலந்துவிடுகிறது. நகரம் விரிவடையும்போது குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தை சீர்படுத்த, மிக பெரிய திட்டத்தை உருவாக்கி, நிதி ஒதுக்கீடும் செய்யவேண்டி வருகின்றது. இதெல்லாம் குப்பைகளை கையாள முன்னேற்றபாடு செய்யப்பட்ட அமைப்புமுறைகள் இல்லாததை தான் காட்டுகின்றன.

நகரங்களிலுள்ள குப்பைகளை கையாள பல வழிமுறைகள் உள்ளன. ஆனால் பொது மக்களின் ஈடுபாடும், ஆதரவுமின்றி செயல்படுத்தப்படும் வழிமுறைகள் பெரும்பாலும் தோல்விகளை சந்திக்கின்றன. இதையெல்லாம் மேற்கொள்ள அரசோ அல்லது குறிப்பிட்ட நிறுவனமோ வேண்டும் என்ற நிலையில்லாமல், பொது மக்களே ஈடுபாடு காட்டுகின்ற சமூக அமைப்பு முறையாக கழிவுகளை கையாண்டால் பயன்மிக்கதாய் அமையும்.

மக்களை ஈடுபடுத்தி கழிவுப்பொருட்களை குறிப்பாக அடுக்களை கழிவுப்பொருட்களை கையாளும் முறை பெய்ஜிங்கில் அறிமுகமாகியுள்ளது. பெய்ஜிங்கிலுள்ள Chunshu குடியிருப்பின் 20 குடும்பங்கள் மண்புழுக்களை கொண்டு அடுக்களை கழிவுகளை அதாவது காய்கறிகளின் எச்சங்களை உரமாக மாற்ற முன்வந்துள்ளன. இதன்மூலம் கிடைக்கும் உரங்களை நகர்புறங்களில் விளைகின்ற காய்கறி தோட்டங்களுக்கு விற்கவும் திட்டமிட்டுள்ளனர்.

1 2 3