• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-29 15:13:10    
உரம் செய்ய விரும்பு

cri

அடுக்களை கழிவுகளை இடுவதற்கான தனிப்பட்ட முறையில் பெட்டி ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். அதன் அடித்தளத்தில் உரமண்ணை இட்டு நிரப்பவேண்டும். இதில் நூற்றுக்கணக்கான மண்புழுக்கள் வாழமுடியும். ஒரு கிலோ மண் புழுக்கள் ஒரு கிலோ அடுக்களை கழிவுகளை மட்கச்செய்து அரை கிலோ உரத்தை உருவாக்கும் என்று தெரிகிறது. இந்த மண்புழுக்கள் குப்பை பெட்டியில் இடப்படுகின்ற காய்கறி தண்டுகள் மற்றும் பழ விதைகளை 5 நாட்களில் மட்கிபோக செய்துவிடுகின்றன. சாதாரணமாக காணப்படுகின்ற மண்புழுக்களை விட இந்த புழுக்கள் சிவப்பு வண்ணத்தில் காணப்படுகின்றன. இவை இரண்டு அல்லது மூன்று சென்டிமீட்டருக்கு குறைவான நீளமுடையது.

பெய்ஜிங்கின் Xicheng மாவட்டத்திலுள்ள மக்களை சந்திப்பதற்காக வந்த ஜப்பானிய ஆசிரியர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் திங்கள் வருகை தந்தனர். அவர்கள் தான் இவ்வாறு கழிவுகளை நுண்ணுயிரியல் முறையில் கையாள்வதை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினர். மண்புழுக்களை வளர்த்து, அடுக்களை கழிவுகளை போடுக்கின்ற நுண்ணுயிர் குப்பை பெட்டி ஒன்றை மாதிரியாக செய்தும் வழங்கினர்.

இம்முயற்சி எளிதாக உள்ளதே என்று எண்ண தோன்றுகிறது அல்லவா? ஆனால் சிலர் இதனை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. வீட்டிற்குள் மண்புழுக்களை வளர்ப்பதை பலர் விரும்பவில்லை. மண்புழுக்கள் அந்த பெட்டியை விட்டு வெளியே வருமா? பெட்டி நாற்றம் அடிக்குமா? என்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் அவ்வாறு எண்ணுவதிலும் பொருளுள்ளது. மட்கிபோகும்போது அழுகிய நாற்றம் வருவது உண்மை தான் என்றும், குடியிருப்பினர் இந்த புழுக்களுக்கு தேவையான காய்கறி குப்பைகளை அன்றாடம் வழங்கி பேணிவருவது முக்கியானது என்றும் குடியிருப்பு பகுதி தலைவர் CuiXiangwen குறிப்பிட்டார்.

1 2 3