• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-29 15:13:10    
உரம் செய்ய விரும்பு

cri

பெய்ஜிங் உலக கிராமத்தின் சுற்றுச்சூழல் பயிற்சி மையம் இந்த குடியிருப்பை சேர்ந்த மக்களின் சந்திப்பை ஒருங்கிணைத்தது. சமூக ஈடுபாட்டை வளர்க்கும் விதமாக Mentougou என்ற இடத்தில் காய்கறி குப்பைகளை கொட்டுவதற்கான தளம் அமைக்க அந்த மையம் ஒத்துக்கொண்டது. இத்திட்டத்தில் பங்கு கொள்வோர் நுண்ணுயிரியல் வழிமுறை மூலம் கிடைக்கும் உரத்தை விற்பனை செய்யலாம். இம்முயற்சி வெற்றிபெற்றால் மேலதிக சமூகங்களில் கழிவுகளை கையாளும் நுண்ணுயிரியல் வழிமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் LI Junling தெரிவித்தார். அடுக்களை கழிவுகளை மண்புழுக்களை வைத்து மட்கச்செய்வது ஜப்பானில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. அமெரிக்காவிலும், ஜப்பானின் எல்லா வீடுகளிலும் இந்த நுண்ணுயிரியல் குப்பை பெட்டிகள் உள்ளன என்று பெய்ஜிங் ஊரக பொருளாதரா ஆய்வு மையத்தின் ஆய்வாளர் Feng Jianguo தெரிவித்தார்.

கேடு விளைவிக்கக்கூடிய பொருட்கள் அடுக்களை கழிவுகளில் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது மின்கல கழிவுகள் போன்றவற்றை அதில் கொட்டக்கூடாது. அப்படி செய்யப்பட்டால் இந்த மண்புழுக்களுக்கு உணவான குப்பைகள் கெடுவதோடு அதனால் கிடைக்கக்கூடிய உரமும் கெட்டுபோகும்.

வீட்டின் பின்புறத்தில் குழி வெட்டி எல்லா குப்பைகளையும் கொட்டி வைப்பதை பார்த்திருப்போம். நாளடைவில் அந்த குப்பைகள் மட்கிபோய் உரமாக விற்கப்படுவதுண்டு. ஒரு வருடத்திற்கு ஒருமுறை கிரமங்களுக்கு சென்று அந்த உரங்களை வாங்கி செல்வோருமுண்டு. ஆனால் நகரங்களில் இத்தகைய வழிமுறையை செய்ய வாய்ப்பும் வசதியும் இல்லாமல் போகிறது. வீட்டிலேயே நுண்ணுயிரியல் குப்பை தொட்டியை வைக்கமுடியுமென்றால் முயற்சித்து பார்ப்தில் தவறில்லை தானே.

அறம் செய்ய விரும்பு – இது

ஔவையார் ஆத்திச்சூடி

உரம் செய்ய விரும்பு – இது

அறிவியல் உலக ஆத்திச்சூடி.


1 2 3