சீனாவில் தொழில் முறை ஏலம் இடுபவரில் ஒருவரான Liu Xin Hui என்பவரை ஆ
cri
 Liu Xin Hui தலைமை தாங்கிய முதலாவது ஏலக் கூட்டத்தில் முத்திரைகள் ஏலம் போடப்பட்டன. அப்போது, புகழ் பெற்ற கலைஞர் Qi Bai Shiவின் இரண்டு கையெழுத்து பொறிக்கப்பட்ட முத்திரைகள், 2 லட்சத்து 20 ஆயிரம் யுவானுக்கு ஏலத்திற்கு சென்றன. அந்த ஏலக்கூட்டத்தில் அதுவே மிக உயர்ந்த தொகையாக இருந்தது. ஏல கூட்டத்தின் மொத்த வியாபாரத் தொகை, 50 லட்சம் யுவானைத் தாண்டியது. இதனால் Liu Xin Hui புகழ் பெற தொடங்கினார். Liu Xin Hui, ஏலத் தொழில் துறையில் ஈடுபடத் துவங்கிய காலம், கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகாலமாகும். சீன ஏலத் தொழில் துறையின் வளர்ச்சி போக்கில் மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்த அதிக நிகழ்ச்சிகள் அக்காலத்தில் தான் நிகழ்ந்தன. 1992ஆம் ஆண்டு, சீன கலைப் பொருட்களின் ஏலம் Shen Zhen நகரில் துவங்கியது. 1995ஆம் ஆண்டு, சீன ஏலத்தொழில் துறை சங்கம் நிறுவப்பட்டது. 1996ஆம் ஆண்டு ஜூலை திங்களில், சீனாவில் ஏலத்திற்கான சட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஏலம் இடுபவரின் உரிமைகள் மற்றும் கடமைகள், ஏல ஒழுங்கு மற்றும் சட்ட பொறுப்பு ஆகியவற்றை இச்சட்டம் விதித்து, ஏல செயல்களை வரையறைபடுத்தியது. அக்காலத்தில், காளான்கள் அதிகமாக பரவி வளர்வதை போன்று சீனாவில் ஏல நிறுவனங்கள் நிறுவப்பட்டன. 1986ஆம் ஆண்டு, சீனப் பெருநிலப்பகுதியில் எட்டு ஏல நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் 1996ஆம் ஆண்டு ஏல நிறுவனங்களின் எண்ணிக்கை 580ஐத் தாண்டியிருந்தது. 1 2 3
|
|