• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-01 11:25:23    
சீனாவில் தொழில் முறை ஏலம் இடுபவரில் ஒருவரான Liu Xin Hui என்பவரை ஆ

cri


கடந்த பத்து ஆண்டுகளின் முயற்சியுடன், தற்போது, ஏல மேடையில் நி்ன்று, Liu Xin Hui முழு நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். தற்போது, ஏலத்தொழில் துறை, மேலதிக சீனர்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஏலம் இடுபவர், மிகவும் வரவேற்கப்படும் பதவிகளில் ஒன்றாக மாறியுள்ளது. புள்ளி விபரங்களின் படி, சீனாவில் சுமார் 5 ஆயிரம் ஏலம் இடுபவர்கள், தரச்சான்று பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் இளைஞர்கள் பலர் இத்துறையில் சேர விரும்புகின்றனர். கருத்து, திறமைசாலிகள் ஆகியவற்றில் சீன ஏல நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு ஏல நிறுவனங்களுக்கும் இடையே இன்னும் இடைவெளி நிலவுகின்றது. பண்பாட்டு அறிவு, ஏல திறமைகள் முதலியவற்றில் வெளிநாட்டு ஏலம் இடுபவர்களிடமிருந்து சீனாவில் ஏலம் இடுபவர்கள் பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று Liu Xin Hui கருத்து தெரிவித்தார். தற்போது, Liu Xin Hui ஏலக்கூட்டத்தில் கலந்து கொள்வது குறைவு. அவர் ஏலம் இடுபவர்களுக்கு பயிற்சி அளிக்கத் துவங்கியுள்ளார். அவர் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில், "ஏலம், எனது வாழ் நாள் முழுவதும் பணி அல்ல. இனி இத்துறை தொடர்பான கல்வியில் ஈடுபட விரும்புகின்றேன்" என்றார்.
இருந்த போதிலும், ஏலத்தொழில் துறையை அவர் மிகவும் நேசிக்கின்றார். அவர் கூறியதாவது:
"எனக்கு பேறு கிடைத்ததாக கருதுகின்றேன். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு கொள்கை நடைமுறைக்கு வராவிட்டால், நான் நாடு திரும்பியிருக்காவிட்டால், சீனக் கலைப் பொருட்கள் ஏலம் விறுவிறுப்பாக வளர்ந்து வரும் 15 ஆண்டுக்காலத்தை தவறவிட்டிருப்பேன். எனக்கு பெரும் பேறு கிடைத்ததாக நினைகின்றேன். மீண்டும் ஒரு முறை தெரிவு செய்தால், ஏலம் இடுகின்ற பணியை தான் இன்னும் தெரிவு செய்வேன். அதுவே எனக்கு ஏற்றது" என்றார், அவர்.
1 2 3