• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Apr 10th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-01 11:25:23    
சீனாவில் தொழில் முறை ஏலம் இடுபவரில் ஒருவரான Liu Xin Hui என்பவரை ஆ

cri


Liu Xin Hui ஏலம் இடுபவராக வேலை செய்யும் காலத்தில், அவரே முதல் நிலை பெற்றவர் என்ற நற்பெயரை பெற்றார். எடுத்துக்காட்டாக, சீனாவில் தரச்சான்று வழங்கப்படும் முதல் தொகுதி ஏலம் இடுபவர்களில் ஒருவராவார். அவர், சர்வதேச அரங்கில் தலைமை தாங்கிய முதலாவது சீன ஏலம் இடுபவராக திகழ்கின்றார். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, சீனாவில் ஏலம் போடப்பட்ட கை எழுத்து மற்றும் ஓவியங்களில், 80 விழுக்காட்டு கை எழுத்து மற்றும் ஓவியங்கள், Liu Xin Huiயின் தலைமையில், ஏலத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
2002ஆம் ஆண்டு, பெய்சிங்கில் நடைபெற்ற ஏலக்கூட்டம் ஒன்றில், Song வம்சத்தின் புகழ் பெற்ற கை எழுத்து கலைஞர் Mi Fuவின் படைப்பை, 2 கோடியே 99 லட்சத்து 90 ஆயிரம் யுவானுக்கு Liu Xin Hui வெற்றிக்கரமாக ஏலத்தில் போக செய்தார். அப்போது சீனாவின் பழங்கால கை எழுத்து மற்றும் ஓவிய படைப்புகளின் ஏலத்தில் அதுவே மிக உயர்ந்த விலை பதிவானது. இந்த ஏலக் கூட்டத்துக்கு முன், Liu Xin Hui, Mi Fuவின் ஊருக்கும், அவர் அதிகாரியாக வேலை செய்த இடத்துக்கும் சென்று, அவரது வம்சாவழியினரை சந்தித்து எல்லா தகவல்களையும் திரட்டியிருந்தார். 2005ஆம் ஆண்டு ஷாங்காயில் நடைபெற்ற ஏலக்கூட்டம் ஒன்றில், விலங்குகளின் கடினமான ஓட்டுப்பகுதி அல்லது எலும்பில் எழுதப்பட்ட 20 பொருட்களை Liu Xin Hui 5 கோடியே 20 லட்சம் யுவான் பெறுமாறு ஏலத்தில் இடப்பட்டது. இது, உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.
முழுமையாகாத புள்ளி் விபரங்களின் படி, 2007ஆம் ஆண்டு வரை, சீனாவில் சுமார் 5 ஆயிரம் ஏல நிறுவனங்கள் இருக்கின்றன. ஏல நடவடிக்கைகள் நடைபெறும் இடம், கடலோர பிரதேசங்கள் மற்றும் பெரிய நகரங்கள் முதல், நடுத்தர மற்றும் சிறு நகரங்கள் வரை விரிவாகியுள்ளது. சுமார் 20 ஆயிரம் பேர் ஏலத் தொழில் துறையில் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதிலும் பெறப்பட்ட ஏல வியாபார தொகை, சுமார் 4000 கோடி யுவானை நெருங்கியது. வணிகம், நெசவுத்துறை, அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு, வீடு மற்றும் நில உடைமைத் துறை உள்ளிட்ட பத்துக்கு அதிகமான துறைகளில் ஏலத் தொழில் துறை நுழைந்துள்ளது.
1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040