 2009ம் ஆண்டு, திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 50வது ஆண்டு நிறைவாகும். இது குறித்து, இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் திங்கள் 28ம் நாளை திபெத்தின் லட்சக்கணக்கான பண்ணை அடிமைகள் விடுதலை பெற்ற நிறைவு நாளாக கொண்டாடும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவை தீர்மானித்தது.
50 ஆண்டுகளு முன்னர் இதே நாளில், நிலப்பிரபுத்துவ பிரபுக்களின் பிடியில் நீண்டகாலம் அடிமையாக வாழ்ந்து வந்த லட்சக்கணக்கான திபெத் அடிமைகள், விடுதலையை வரவேற்றனர். அதன் பிறகு, திபெத்தில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன.
நீண்டகாலமாக, திபெத்தில், அரசியலும் மதமும் ஒன்றிணைந்த நிலப்பிரபுக்களின் சர்வாதிகார அமைப்பு முறை, நடைமுறையில் இருந்தது. தலாய்லாமா உள்ளிட்ட புத்த மத உயர்நிலை பிரமுகர், நிலப்பிரபுக்களின் பிரதிநிதிப் பிரமுகர்களாக வாழ்ந்து வந்தனர். பனி மூடிய பீடபூமியில் இருண்டதாக அமைந்த நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை, பல்லாயிரம் ஆண்டுகளாக, நிலவி வந்துள்ளது.
பழைய திபெத்தில், மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்குக் குறைவான வட்டார அதிகாரிகள், உயர் குடி மக்கள், கோயில் உயர்நிலை துறவிகள் முதலிய பண்ணை அடிமைச் சொந்தகாரர்கள், திபெத்தின் முழுமையான விளைநிலம், மேய்ச்சல் நிலம், காடு, மலைகள், பெரும் பகுதியான விலங்குகள் முதலியவற்றைக் கொண்டிருந்தனர். பண்ணை அடிமைச் சொந்தகாரர்கள், மக்கள் தொகையின் 90 விழுக்காட்டுக்கு மேலான அடிமைகளை, தனது தனியார் சொத்தாக மாற்றியிருந்தனர். அவர்களை தங்களுடைய விருப்பம் போல், வாங்கவும், விற்பனை செய்யவும், மாற்றிக் கொடுக்கவும், அன்பளிப்பாக வழங்கவும், பரிமாறிக் கொள்ளவும் கூடிய பொருட்களாகவே உரிமை பாராட்டி வந்தனர்.
1 2 3
|