• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-10 17:10:15    
திபெத் பண்ணை அடிமைகளின் விடுதலை வரலாறு

cri

இதற்கு பின்னர், மூன்று நாட்களுக்குள், சீன மக்கள் விடுதலைப்படையினர், திபெத்தின் லாசாவில் ஏற்பட்ட கலகத்தை கட்டுப்படுத்தி, கலக்காரர்களை அடக்கினர். தணிவுப்படுத்தினர். 1959ம் ஆண்டின் மார்ச் திங்கள் 28ம் நாள், திபெத் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை, நீக்கப்பட்டதை அறிவித்து முன்னாள் சீனத் தலைமையமைச்சர் zhou en lai, அரசு கட்டளை பிறப்பித்தார். அக்காலத்திலிருந்து, திபெத் மக்கள், நாட்டின் உரிமையாளராக மாறிய நாளை மகிழ்ச்சியோடு வரவேற்று கொண்டாடுகின்றனர். ஜனநாயகச் சீர்திருத்ததை அதிகாரப்பூர்வமாக திபெத் துவங்கியது. அரசியலும் மதமும் ஒன்றிணைந்த நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை, நீக்கப்பட்டது. லட்சக்கணக்கான பண்ணை அடிமைகளும் அடிமைகளும், தனிநபர் சுதந்திரத்தையும் நிலவறிமையையும் பெற்றனர். சட்டரீதியிலான அரசியல் உரிமையையும் அவர்கள் அனுபவிக்கத் தொடங்கினர்.

சீனத் திபெத்தியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் zhang xiao ping கூறியதாவது

மாபெரும் ஜனநாயகச் சீர்திருத்தத்தால் தான், திபெத்தில் முழுமையான விடுதலை நனவாக்கப் பட்டுள்ளது. அடிமைகளின் உற்சாகமான உழைப்பால், ஏறக்குறைய அரை நூற்றாண்டில், திபெத் சமூகம், விரைவாக முன்னேறியுள்ளது.

ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 50 ஆண்டுகளில் விரைவான வளர்ச்சியின் மூலம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சமூகப் பொருளாதரம், பன்முகங்களிலும் வளர்ந்து வருகின்றது. இன்றைய திபெத் மக்கள், அமைதியான மற்றும் இன்பமான புதிய வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.


1 2 3