• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-17 23:02:13    
Zhaxi Shoba என்ற திபெத் நாடகம்

cri

லோகா மாவட்டத்தில், Tashi Chorten என்ற ஒரு சிறிய ஊர் இருக்கிறது. இங்கு, Zhaxi Shoba என்ற பாரம்பரிய திபெத் நாடகம் பரவலாக புகழ்பெற்றுள்ளது. இந்நாடகம், திபெத் நாடகங்களில், அதிக செல்வாக்கு வாய்ந்த ஒரு நாடகமாகும். தற்போது, அது, சீனாவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

திபெத் புத்தமதத்தின் புகழ்பெற்ற மூத்த மத குருமார் Tangdong Gyibo, லோகா பிரதேசத்தின் நேதூங் மாவட்டத்தின் Tashi Chorten ஊருக்கு சென்றார். பின்பு சுற்றுப் பிரதேசங்களுக்குச் சென்று, நிகழ்ச்சி அரங்கேற்றுவதற்காக, அவர் ஒரு பாலத்தைக் கட்டியமைத்தார். பின்னர், இந்த நிகழ்ச்சி, Zhaxi Shoba திபெத் நாடகம் என அழைக்கப்பட்டது.

Tangdong Gyibo, திபெத் நாடகத்தின் மூதாதையராக அழைக்கப்படுகிறார். திபெத்தில் முதன்முதலாக பாலத்தைக் கட்டியமைத்தவரும் அவரே. திபெத்தில் பரந்த இடங்களிலான மக்கள், ஒருவருக்கொருவர் உதவி செய்து, பரிமாறுவதற்காக, அவர், இப்பாலத்தைக் கட்டியமைக்க தீர்மானித்தார் என்று கூறப்படுகிறது.

இதனால், Tashi Chorten ஊரின் மக்கள், இந்த நாடகத்தை பரவலாக்கும் சுமையை ஏற்கின்றனர். இது, திபெத் நாடகத்தின் துவக்கப்புள்ளி. இது, அரிதானது. கிராமவாசி Pema Dondrup, Zhaxi Shoba திபெத் நாடகத்தின் 7வது தலைமுறை பரவல் ஆசிரியர் ஆவார். 87 வயதான போதிலும், நாள்தோறும் அவர் இவ்வூரின் திபெத் நாடகக் குழுவின் பயிற்சியை பார்வையிட்டு, மாணவர்களுக்கு பாடல் திறமையை கற்றுக் கொடுத்து வருகின்றார்.

1 2 3