
மங்கலச் சின்னமாக விளங்கும், Zhaxi Shoba திபெத் நாடகம், கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி, வேறு திபெத் நாடகங்களால் ஈடு செய்ய முடியாத தகுநிலையில் உள்ளது என்று Pema Dondrup கூறினார்.
9 வயதான போது, நான் Zhaxi Shoba திபெத் நாடகத்தைக் கற்கத் துவங்கினேன். அப்போது, ஆசிரியர்கள், திபெத் நாடகம் பற்றிய பல தத்துவங்களை கற்றுக் கொடுத்தனர். அப்போதைய Zhaxi Shoba திபெத் நாடகக் குழு, திபெத்தில் பல்வேறு கோயில்களுக்கும், உயர் குடி மக்களின் வீடுகளுக்கும் அடிக்கடி சென்று, அரங்கேற்றியது என்று Pema Dondrup கூறினார்
பழைய திபெத்தில், கோயில்களிலான மத நடவடிக்கைகள், உயர் குடிமக்களின் விழாக்கள், புத்தாண்டுக்கான நடவடிக்கை முதலியவற்றில், Zhaxi Shoba திபெத் நாடகம், இன்றியமையாத நிகழ்ச்சியாகும். இது, வெறும் கலை நிகழ்ச்சி அரங்கேற்றம் மட்டுமல்லாது, மங்கலமாகவும் கருதப்பட்டது.
1959ம் ஆண்டு, திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின், குறிப்பாக, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட பின், சிறுபான்மைத் தேசிய இனங்களின் பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு, சீன அரசு, முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தப் பண்பாட்டு மரபுச் செல்வங்களை காலதாமதமின்றித் திரட்டி, தொகுப்பதற்காக, சீன அரசு, சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களில், சிறப்பு நிறுவனங்களை உருவாக்கியது. இது, இந்தப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பரவலுக்கு உறுதியான அடிப்படையிட்டுள்ளது.
1 2 3
|