• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-17 23:02:13    
Zhaxi Shoba என்ற திபெத் நாடகம்

cri

திபெத்தின் லோகா பிரதேசத்தின் தேசிய இனப் பண்பாட்டு மரபுச் செல்வ மீட்பு அலுவலகத்தின் இயக்குநர் Rgyatso கூறியதாவது,

1985ம் ஆண்டு, நாங்கள், லோகா பிரதேசத்தில் தேசிய இனப் பண்பாட்டுப் பாதுகாப்புப் பணியை துவங்கினோம் என்று Rgyatso கூறினார்.

தேசிய இனப் பண்பாட்டு மீட்புப் பணிகளில் ஒரு பகுதியாக, லோகா பிரதேசம், 1986ம் ஆண்டு, Zhaxi Shoba திபெத் நாடக மீட்பு வகுப்பை நிறுவி, Pema Dondrupஐ ஆசிரியராக பணியாற்ற அழைப்பு விடுத்தது. இதன் விளைவாக, Zhaxi Shoba திபெத் நாடகம் தொடர்ந்து பரவல் செய்யப்பட முடிந்தது. இது பற்றி Pema Dondrup கூறியதாவது,

முதல் தொகுதி மாணவர்களாக 26 இளைஞர்கள் இடம்பெற்றனர். அவர்களுக்கு, Zhaxi Shoba பற்றிய அறிவு ஏதும் முன்னதாக இருக்கவில்லை. எனவே, சிரமத்துடன் கற்றனர். ஆனால், எனது மனம் ஆறுதலாகவே இருந்தது. ஏனென்றால், Zhaxi Shoba திபெத் நாடகத்தைத் தொடர்ந்து பரவலாக்க முடியும் என்பது தான் என்று Pema Dondrup கூறினார்.

இப்போது, Pema Dondrup விடம் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை, சுமார் 200 ஆகும். அவர்கள், பல்வேறு இடங்களில், கலை நிலையத்தின் கலைஞர்களாக அல்லது அரங்கேற்றக் குழுவின் கலைஞர்களாக, திபெத் நாட்டுப்புறக் கலையில் ஈடுபட்டு வருகின்றனர். Pema Dondrupஇன் மாணவர் Nyima Tsering, Zhaxi Shoba திபெத் நாடகத்தின் 8வது தலைமுறை பரவல் ஆசிரியராக மாறியுள்ளார். அவர், Zhaxi Shoba திபெத் நாடகத்தைப் பரப்பும் முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார். Nyima Tsering கூறியதாவது,

எமது ஆசிரியர்கள், எங்களுக்கு Zhaxi Shoba திபெத் நாடகத்தின் அரங்கேற்றத்தை கற்றுக் கொடுப்பதோடு, ஒரு கலையை எப்படி உண்மையாக விரும்ப வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தனர். நான், ஆசிரியர்களை நினைவு கூர்ந்து, சிரமங்களைச் சமாளித்து, ஆசிரியர்கள் மற்றும் எமது பொது கனவைத் தொடர்ந்து நனவாக்க முயற்சிக்க வேண்டும் என்று Nyima Tsering கூறினார்.


1 2 3