• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-21 15:20:52    
ச்சொங்வென்மன் மற்றும் ஷுவான்வூமன்

cri
ச்சொங்வென்மன் மற்றும் ஷுவான்வூமன்

   

ச்சொங்வென்மன் என்றால் மதிப்பான இலக்கிய வாயில் என்று பொருள். ஷுவான்வூமன் என்றால் உலகில் சிறந்த திறமை வாயில் என்று பொருள். இவையிரண்டும் பேரரசர் பெரும்பாலும் பயன்படுத்திய மைய அல்லது முக்கிய நுழைவாயிலான ச்சியன்மன்னின் தெற்கே அமைந்தவை.

சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் இந்த பெய்ஜிங்கின் கட்டிடவியல் பற்றிய தொடருக்கு முன்பாக அரசுப்பணிக்கான தேர்வுமுறை பற்றி கூறியது நினைவிருக்கலாம். அவ்வாறு அரசுப்பணிக்கான தேர்வில் பங்கேற்க பெய்ஜிங் வந்தவர்கள் பயன்படுத்திய வாயில், மதிப்பான இலக்கிய வாயில் என்று பொருள்படும் ச்சொங்வென்மன் வாயிலாகும். அவ்வாறே ஷுவான்வூமன்

வாயில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட சிறைக்கைதிகளில் தண்டனை நிறைவேற்றப்படவேண்டியவர்கள் கொண்டு செல்லப்பட்ட வழியாக இருந்ததாம். அரசுப்பணி தேர்வெழுத வந்தவர்கள் தவிர தென் பகுதி மது வணிகர்களும் ச்சொங்வென்மன் வாயில் வழியாகவே பெய்ஜிங் நகருக்குள் நுழைந்தனராம். தென் சீனாவை சேர்ந்த பல வணிகர்கள் இந்த ச்சொங்வென்மன் வாயில் வழியாகவே நுழைந்தனர். மட்டுமல்ல அங்குதான் அவர்களது வணிகப் பொருட்கள் சுங்கப் பரிசோதனை மற்றும் தீர்வை செய்யப்பட்டன. 1959ம் ஆண்டில் இந்த ச்சொங்வென்மன் வாயில் தகர்த்தழிக்கப்பட்டது. 1965ம் ஆண்டில் ஷுவான்வூமன் வாயிலும் தகர்க்கப்பட்டது.

1 2 3