ஜியாங்குவோமன்,

ஜியாங்குவோமன் என்றால் நாட்டின் உருவாக்க வாயில் என்று பொருள். ஃபூஷிங்மன் என்றால் புத்தாக்க வாயில் என்று பொருள். இவை முறையே பெய்ஜிங்கை சுற்றிய அரணின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி சுவற்றில் அமைந்த வாயில்களாகும். இவை வெறுமனே வந்துபோகும் வாயில்கள் மட்டுமே. கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட ராணுவம் மற்றும் பாதுகாப்பு சார் ஏற்பாடுகள் ஏதும் இந்த வாயில்களில் இருக்கவில்லை.
யோங்திங்மன்
நகரின் மைய அச்சின் தென்கோடி முனையில் கோபுரமாக எழுந்து நின்றது இந்த யோங்திங்மன் வாயில். மிங் மற்றும் ச்சிங் வம்சக்காலங்களில் வெளிப்புற நகரின் முக்கிய வாயிலாக இந்த யோங்திங்மன் வாயில் விளங்கியது. பெய்ஜிங்கில் இன்றளவும் நிற்கும் அக்கால நுழைவாயில்களில் இந்த யோங்திங்மன்னும் ஒன்று. 1949ம் ஆண்டில் சீன விடுதலைப் படை பெய்ஜிங் நகருக்குள் இந்த வாயிலின் வழியாகத்தான் நுழைந்தது. 1957ம் ஆண்டில் இந்த வாயில் தகர்க்கப்பட்டது ஆனால் 2004ம் ஆண்டு மீண்டும் பழைய இடத்திலேயே கட்டியமைக்கப்பட்டது. 1 2 3
|