• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-21 15:20:52    
ச்சொங்வென்மன் மற்றும் ஷுவான்வூமன்

cri

ஆந்திங்மன் மற்றும் தெஷெங்மன்

    

சீன மொழியில் ஆந்திங்மன் என்றால் அமைதி மற்றும் நிலைத்தன்மையின் வாயில் என பொருள்படும். அவ்வாறே தெஷெங்மன் என்றால் நற்பண்பு மற்றும் வெற்றியின் வாயில் என்று பொருள். இவை நகரத்தை சுற்றிய கோட்டை சுவரின் வடக்கே அமைந்த வாயில்களாகும். அந்திங்மன்னுக்கு ஷெங்மன் என்ற பெயரும் இருந்தது. ஷெங்மன் என்றால் உயிர் அல்லது வாழ்க்கையின் வாயில் என்று பொருள். இந்த ஆந்திங்மென் வாயில் வழியாகத்தான் பேரரசர்கள் தீதான் எனும் புவிக்கோயிலுக்கு சென்று நல்ல விளைச்சலும், அமோக அறுவடையும் பெற இறைமன்றாடினார்களாம்.

துங்ஷுமன் மற்றும் ஷிஷுமென்

இவ்விரு வாயில்களும் அக்காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. தென் சீனாவிலிருந்தான மரத்துண்டுகள் பெய்ஜிங்கிற்கு அனுப்பப்படும்போது, நீர் கால்வாய் வழையாக வந்துசேரும் மரங்கள் துங்ஷுமன் வாயிலுக்கு வெளியேதான் குவிக்கப்பட்டனவாம். ஷிஷுமன் வாயில் வழியாகத்தான் பேரரசருக்கு தேவையான குடிநீர் பெய்ஜிங்கிற்குள் கொண்டு வரப்பட்டது. மட்டுமல்ல சிங் வம்சக்கால பேரரசர்களும், பேரரசிகளும் துல்லிய ஒளிர்வு பூங்கா மற்றும் கோடைக்கால மாளிகைக்கு செல்லும்போது ஷிஷுமன் வாயிலே, ஊடுவழியாக இருந்தது.

1900ம் ஆண்டில் ச்சிங் வம்ச பேரரசர் குவான்ஷுவும், கணவனை இழந்த பேரரசி சிஷியும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் படையெடுத்து வந்து தடைசெய்யப்பட்ட நகரை சுற்றிவளைத்து கைப்பற்றியபோது இந்த வாயில் வழியாகத்தான் ஷான்ஷி மாநிலத்தின் ஷியான் நகருக்கு தப்பிச் சென்றனர்.

துங்ஷுமன் மற்றும் ஷிஷுமென் இரு வாயில்களும் 1965ம் ஆண்டில் தகர்க்கப்பட்டன.

1 2 3