• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-22 15:10:35    
மலை பகுதியில் பிறந்து உலக புகழ் அடைந்துள்ள Long Yong Tu அ

cri
Long Yong Tu என்ற பெயர், உலக வர்த்தக அமைப்பில் சீனா சேருகின்ற வளர்ச்சி போக்குடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது. சீனா உலக வர்த்தக அமைப்பில் சேர்வதற்கான பேச்சுவார்த்தையின் தலைமை பிரதிநிதியாக இருந்த Long Yong Tu சீனா முழுவதிலும் மிகவும் புகழ் பெற்றவர்.

Long Yong Tu 1943ஆம் ஆண்டு, Hu Nan மாநிலத்தின் தலைநகரான Chang Shaவில் பிறந்து, Gui Zhou மாநிலத்தில் வளர்ந்தார். மலையிலிருந்து வந்த வறிய குழந்தை என்று அவர் தன்னை தானே அழைத்துக் கொள்கிறார்.

இருந்த போதிலும் கனிந்த நல்ல வாய்ப்பு காரணமாக, மலையிலேயே வாழ்வதற்குப் பதிலாக, அவர் உலகளவில் புகழ் பெற்று படிப்படியாக உயர்ந்து செல்கிறார்.

Gui Zhou பல்கலைக்கழகத்தில், அவர் சீன மொழி துறையில் கற்றுக்கொண்டிருந்த போது, ஓர் ஆசிரியரின் ஆலோசனையின் படி, அவர் ஆங்கில மொழி துறையில் சேர்ந்து, கற்றுக்கொள்ள தொடங்கினார்.

ஆங்கில மொழியை நன்கு கற்றுக்கொண்ட அவர், 1965ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவுடன், அன்னிய மொழி திறமைசாலிகள் மிகவும் தேவைப்பட்ட வெளிநாட்டு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், மேலை நாட்டில் கல்வி பயில அனுப்பப்பட்ட முதலாவது தொகுதி மாணவர்களில் Long Yong Tu இடம்பெற்றார். 1973ஆம் ஆண்டு பிரிட்டனின் இலண்டன் பொருளாதாரக் கல்லூரிக்கு சென்ற அவர் சர்வதேசப் பொருளாதாரப் பாடத்தை கற்றார். Long Yong Tu கூறியதாவது:

"அப்போது என்னை போன்ற ஒரே வயதுடைய இளைஞர்கள் அவ்வளவு அதிக அறிவை கற்று கொள்ளவில்லை. ஆனால் வெளிநாட்டில் நாங்கள் மேலை நாட்டு பொருளியல் பயின்ற போது, மேலை நாட்டுப் பொருளாதார வளர்ச்சி நிலைமை பற்றியும், சந்தைப் பொருளாதாரத் தத்துவம் பற்றியும் புரிந்து கொண்டோம். பின்பு சர்வதேச நடவடிக்கைகளில் நாங்கள் கலந்து கொள்வதற்கு இது பெரிதும் துணை புரிந்தது" என்றார், அவர்.

1 2 3