• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Apr 10th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-22 15:10:35    
மலை பகுதியில் பிறந்து உலக புகழ் அடைந்துள்ள Long Yong Tu அ

cri

1992ஆம் ஆண்டு, சீன வெளிநாட்டு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சகத்தின் சர்வதேசப் பிரிவின் தலைவர் என்ற முறையில், சுங்கவரி மற்றும் வர்த்தகத்தின் பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நாட்டின் தகுநிலையை மீட்பதற்கான பேச்சுவார்த்தையின் சீனப் பிரதிநிதிக் குழுவில் Long Yong Tu சேர்ந்தார். அது வரை, ஏற்கெனவே 6 ஆண்டுகளாக சீனா பேச்சுவார்த்தை நடத்திவந்தது.

1996ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள், சுங்கவரி மற்றும் வர்த்தகத்தின் பொது ஒப்பந்தத்துக்கு பதிலாக உலக வர்த்தக அமைப்பு தோன்றியது. உலக வர்த்தக அமைப்பில் சேர்வதற்கான பேச்சுவார்த்தையின் சீனாவின் தலைமை பிரதிநிதியாக Long Yong Tu நியமிக்கப்பட்டார். அதற்குப் பிந்திய 6 ஆண்டுகளில், சீனாவின் சார்பில், உலக வர்த்தக அமைப்பின் 37 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அவர் கூறியதாவது:

"வெளிநாட்டு பிரதிநிதிகளின் கடுமையான நிர்ப்பந்தங்களை எதிர்நோக்கினேன். 'தங்கள் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆனால், அக்கோரிக்கை சீனாவின் நலனுக்கு ஏற்றதாக அமையாது என்றால், நாங்கள் உடன்படிக்கையில் கையொப்பமிட்டாலும், சீனா, அதை நடைமுறைப்படுத்துவது கடினம். இதனால், சர்வதேச விதிகள், தங்கள் நலன்கள், சீன நலன்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற உடன்படிக்கையை உருவாக்க வேண்டும்' என்று அவர்களிடம் எடுத்து கூறினேன்" என்றார், அவர்.


1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040