காலை 6 மணிக்கு, ஷான்துங் மாநிலத்து weifang நகரத்தின் meicun கிராமப்புறத்தின் விவசாயி, yang yuanchen வாகனத்தை ஓட்டி கொண்டு புறப்பட்டார். வீட்டிலிருந்து சில பத்து கிலோமீட்டர் தூரத்திலான சந்தைக்கு சென்று, தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்கினார். இவ்வாண்டின் மார்ச் திங்கள் முதல், இப்படி செய்வது, அவரது அன்றாட வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறியுள்ளது.
முன்பு, நான் நகர்புறத்திற்கு சென்று பொருட்களை வாங்கினேன். அதிக பொருட்களை கொண்டு செல்ல ஒவ்வொரு முறையும் ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுக்க வேண்டும். சொந்த வாகனம் இருந்தால் எனக்கு மிக வசதியாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அத்துடன் வாகனத்தை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் எனது வருமானத்தை அதிகரிக்க முடியும் என்று yang yuanchen கூறினார்.
yang yuanchen போலவே, ஒரு வாகனத்தை வாங்குவது, பல சீன விவசாயிகளின் விருப்பமாக மாறியுள்ளது. சர்வதேச நிதி நெருக்கடி நகரப்புற வாகன சந்தையைப் பாதித்த போது, சீன அரசு மேலதிக பார்வையை கிராமப்புறங்களில் செலுத்தியது. இந்த பின்னணியில், கிராமப்புறங்களில் வாகனங்கள் நுழைவது என்ற கொள்கை வெளியானது. கிராமங்களில் பயன்படுவதற்கு உகந்த வாகனங்களை வாங்க, சீன அரசு விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கிறது. வாகனங்கள் வங்குகின்ற விவசாயி, அதிகமாக 5 ஆயிரம் யுவான் மானியத்தை பெற முடியும். இதனால், yang yuanchen வாகனத்தை வாங்க முடிவெடுத்தார். அவர் கூறியதாவது,
கிராமப்புறத்தில் வாகனங்கள் நுழைவதென்ற கொள்கையின் படி, விவசாயிகள் வாகனத்தை வாங்கும் போது, 2000 யுவான் வரி குறைக்கப்படுகிறது. கொள்கையின்படி, 3000 யுவான் மானியமும் பெறலாம். இப்படி, 30ஆயிரம் யுவான் மதிப்புள்ள புதிய வாகனத்தை, 20 ஆயிரத்துக்கு மேல் செலவிட்டு வாங்க முடியும் என்று அவர் கூறினார்.
1 2 3
|