முன்பு, விவசாயிகளிடம் வாகனங்கள் வாங்கும் விருப்பம் அதிகமாக இல்லை. பல வாகனத் தொழில்நிறுவனங்கள் தங்களது கவனத்தை நகர சந்தைகளில் மட்டுமே செலுத்தின. ஆனால், கிராமப்புறத்தில் வாகனம் நுழைவது என்ற கொள்கையின் பயன் நாளுக்கு நாள் தெளிவாக மாறியுள்ளது. இத்துடன், வாகன உற்பத்தி நிறுவனங்கள் வணிக வாய்ப்பை கண்டறிந்து விற்பனை திசையையும் மாற்றின. அவை விவசாயிகளின் தேவைக்குகந்த வாகனங்களைத் தயாரிக்க துவங்கின. சீன கிராமப்புறத்தில் மிக பெரிய பங்கு வகிக்கின்ற வாகன குழுமமான ஷாங்காய்-Generol motors குழுமம், இக்கொள்கையிலிருந்து பயன் பெற்றது. அதன் wuling என்ற வாகன வகையின் விற்பனை தொழில் நிறுவனத்தின் மேலாளர் yang jie கூறினார்.
இவ்வாண்டின் முதல்காலாண்டில் நாங்கள் விற்பனை, 2 இலட்சத்து 40 ஆயிரத்து அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளோம். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 32 விழுக்காடு அதிகரித்தது. தற்போது விற்பனை நிலை சிறந்ததாக உள்ளது. இது எங்கள் விற்பனை நிறுவனத்திற்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார்.
வாகன உற்பத்தி குழுமங்களைத் தவிர, விற்பனை தொழில்நிறுவனங்களும் பெரும் மகிழ்ச்சியடைகின்றன. பெய்ஜிங்கின் வடக்கு புறநகரிலான chang'an வாகன விற்பனை கடையில், வாகனங்களை வாங்க விரும்புவோர் இடைவிடாமல் வந்து பார்கின்றனர். அரசின் சாதகமான கொள்கை வெளியாகியவுடன், விவசாயிகள் வாங்கிய வாகனங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. chang'an வாகன விற்பனை கடையின் மேலாளர் கூறியதாவது,
தற்போது, விவசாயிகளின் வாகனங்கள் வாங்கும் ஆர்வம் ஓங்கி வளர்கின்றது. அவர்கள் வாகனங்களை வாங்க முன்கூட்டிய பதிவு செய்கிறார்கள். கடையில் சுமார் 100 வாகனங்கள் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால் தான் வினியோகத்தை நிறைவு செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
1 2 3
|