கிராமப்புற சந்தையின் பெரிய உள்ளார்ந்த ஆற்றல்,வாகனத் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்த்தை பெரிதும் தாண்டியது. முன்பு, சிறிய சீருந்துகளை தயாரிக்கின்ற தொழில்நிறுவனங்களும் விவசாயிகளின் தேவைக்கு உகந்த வாகனங்களை உற்பத்தி செய்ய துவங்கியது. சீனாவின் மிக பெரிய தற்சார்பு வாகனத் தொழில்நிறுவனமான Qirui நிறுவனம், சிறிய ரக பயணியர் வாகனங்களைத் தயாரித்து கிராமப்புற சந்தையை கைபற்ற விரும்புகிறது. அதன் துணை மேலாளர் jin yibo கூறியதாவது,
நாங்கள் புதிதாக தயாரித்த வாகன வகை, கிராமப்புறத்தின் பயன்பாட்டுக்கு உகந்தது. தவிர, கிராமப்புறத்தில் பலர் சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்து சேவை புரிகின்றனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறிய ரக பயணியர் வாகனத்தைத் தயாரிக்கிறோம் என்று அவர் கூறினார்.
செல்வாக்கைப் பெரிதாக்கி சந்தையில் வகிக்கின்ற விகிதத்தை அதிகரிக்கும் வகையில், வாகன தொழில்நிறுவனங்கள், விற்பனைக்குப் பிந்திய சேவை அளவை பரவாக்கியுள்ளன. எனவே விவசாயிகள் வாங்கிய வாகனங்கள், கிராமப்புறத்திலே முழுமையாக செப்பனிடும் சேவையை பெற முடியும். இது பற்றி, ஷாங்காய்-General motors குழுமத்தின் விற்பனை பிரிவின் மேலாளர் yang jie கூறியதாவது,
நகரங்களில் 90 விழுக்காடான இடங்களில் சேவைத் தளங்களை நிறுவினோம். நாட்டிலுள்ள மாவட்டங்களில் இந்த விகிதம் 30 விழுக்காடாகும். சியாங் சு, ஷென் துங் முதலிய வளர்ந்த பிரதேசங்களில், அனைத்து மாவட்டங்களிலும் சேவை தளங்கள் அமைந்துள்ளன. இது, எங்கள் விற்பனையின் அதிகரிப்பை முன்னேற்றியது. தவிர, வாகன நுகர்வோருக்கு வசதியான விரைவான சேவை புரிகிறோம் என்று அவர் கூறினார்.
உலகின் 2வது பெரிய வாகன நுகர்வு நாடான சீனாவில், இவ்வாண்டின் வாகன விற்பனை அளவு, 1 கோடியைத் தாண்டக் கூடும். மதிப்பீட்டின்படி, கிராமப்புறத்தில் வாகனங்கள் நுழைவது உள்ளிட்ட பல கொள்கைகளின் நடைமுறையுடன், சீன கிராமப்புறத்தில் வாகன விற்பனை அளவை, 10 இலட்சத்தை தாண்டி வரலாற்றில் மிக அதிகமான அளவு எட்டும். 1 2 3
|