• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-17 11:09:58    
எரியாற்றலை சிக்கனப்படுத்தும் தயாரிப்புகள்

cri

கடந்த சில ஆண்டுகளில், எரியாற்றல் சிக்கனம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பை சீன அரசு ஆக்கப்பூர்வமாக பரப்புரை செய்து வருகிறது. எரியாற்றலை சிக்கனப்படுத்தும் தயாரிப்புகள், சீனச் சந்தையில் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரியற்றலை சிக்கனப்படுத்தும், விளக்கு, கட்டிடம், வெப்ப வசதி முதலியவை பெய்ஜிங் மாநகரில் காணப்படுகின்றன. எரியாற்றலை சிக்கனப்படுத்தும் கண்ணோட்டம், பொது மக்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது.

Zhaorui அம்மையார், பெய்ஜிங் மாநகரின் ஹய் தியன் மாவட்டத்தில் வாழ்கின்றார். இவ்வாண்டு, எரியாற்றலை சிக்கனப்படுத்தும் குளிர் சாதனப் பெட்டி ஒன்றை அவர் வாங்கினார். அவர் கூறியதாவது

இவ்வாண்டு, இந்த குளிர் சாதனப் பெட்டியை நான் வாங்கினேன். அதற்கு முன், வெளிநாடுகளின் குளிர் சாதனப் பெட்டி ஒன்றை வாங்க நினைத்தேன். ஆனால், எரியாற்றலை சிக்கனப்படுத்தும் குளிர் சாதனப் பெட்டிகளை haier நிறுவனம் தயாரிக்கிறது என்பதை அறிந்த பின், இந்நிறுவனத்தின் குளிர் சாதனப் பெட்டி ஒன்றை நான் வாங்கினேன். இதன் மூலம், மின்சாரத்தையும் பணத்தையும் சிக்கனப்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

எரியாற்றலை சிக்கனப்படுத்தும் தயாரிப்புகள், பொது மக்களுக்கு நன்மை பயக்கும். ஆகையால், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் துறையை, பல தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து விரிவாக்கி வருகின்றன. புதிய உற்பத்திப் பொருட்களை அவை ஆராய்ந்து தயாரித்து, சந்தையின் புதிய வணிக வாய்ப்பை பற்றிக்கொண்டுள்ளன.

haier நிறுவனத்தின் தயாரிப்புகள், சந்தையில் மிகவும் வரவேற்கப்படுகின்றன. இனிமேல், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் தயாரிப்புகளை இந்நிறுவனம் பெரிதும் வளர்க்கும் என்று இந்நிறுவனத்தைச் சேர்ந்த இணைய மூல விற்பனைக்குப் பொறுப்பான zhangqianqian அம்மையார் தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:

எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் மேலதிகமான தயாரிப்புகளை எமது நிறுவனம் தயாரிக்கிறது. அதேவேளையில், இந்த அறிவியல் தொழில் நுட்பம், காற்று பதனாக்கி தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, மேலதிகமான மின்னாற்றல் சிக்கனப்படுத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

பொது மக்கள் மட்டுமல்ல, எரியாற்றல் மேலும் சிக்கனமாகப் பயன்படுத்தும் தயாரிப்புகளை பல தொழில் நிறுவனங்களும் வாங்கி வருகின்றன.

1 2 3