• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-17 11:09:58    
எரியாற்றலை சிக்கனப்படுத்தும் தயாரிப்புகள்

cri

எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் அரசின் அறைகூவலின்படி, பெய்ஜிங் மாநகரின் shijingshan மாவட்டத்திலுள்ள வெப்பம் வசதி நிறுவனம், வெப்ப வினியோக வசதிகளின் மின்னாற்றலை சிக்கனப்படுத்தும் தொழில் நுட்பத்தை புத்தாக்கம் செய்து சீரமைத்தது. 2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை, இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திய பின், மின்சாரப் பயன்பாடு, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, 30 விழுக்காடு குறைந்தது. இந்நிறுவனத்தின் பொறுப்பாளர் tiankeli கூறியதாவது:

தொழில் நுட்பப் புத்தாக்கத்தின் மூலம், எரியாற்றலை சிக்கனப்படுத்தும் நலன் குறிப்பிட்டத்தக்கது. கடந்த குளிர்காலத்தில், வெப்பம் வழங்கப்படும் அளவு 17 இலட்சம் சதுர மீட்டராகும். 6 இலட்சம் கோடி யுவான் மதிப்புள்ள மின்சாரச் செலவு குறைந்தது. எனவே, உற்பத்திச் செலவும் பெரிதும் குறைந்தது என்று அவர் கூறினார்.

அதேவேளையில், பெய்ஜிங் பேருந்து குழுமமும், வாடகைச் சீருந்து தொழில் நிறுவனங்களும், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் நடவடிக்கையில் கலந்துகொண்டு வருகின்றன. இவ்வாண்டு, ஆயிரக்கணக்கான புதிய எரியாற்றலைப் பயன்படுத்தும் பேருந்துகளை பெய்ஜிங் அரசு வாங்கும். மாசுப்பாடற்ற எரியாற்றலை பயன்படுத்தும் உந்துவண்டிகள், மின்னாற்றலால் இயங்கும் உந்துவண்டிகள் முதலியவை இதில் அடங்குகின்றன.

2008ம் ஆண்டு, பெய்ஜிங் மாநகரின் பொருளாதாரத் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தின் ஒவ்வொரு 10 ஆயிரம் யுவான் மதிப்புள்ள தயாரிப்புகளுக்கான எரியாற்றல் செலவு, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 0.03 விழுக்காடு அதிகரித்தது. இதர 18 மாவட்டங்களிலும் இந்த செலவு குறைந்தது.

எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் தயாரிப்புகளின் பரவல் போக்கில், சில பிரச்சினைகள் உள்ளன. இத்தகைய விளக்குகள் விலை அதிகம் என்பதால், பரவல் செய்வது கடினம் என்று பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீனப் பொருளாதார ஆய்வு மையத்தின் பேராசிரியர் tangmin கருத்து தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:

தற்போது, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் விளக்குகளின் விலை, கொஞ்சம் அதிகம். விலையை குறைத்தால், பொது மக்கள் இத்தகைய விளக்குகளை வாங்க விரும்புகின்றனர் என்று அவர் கூறினார்.

ஆனால், விலை அதிகம் என்ற பிரச்சினை வெகுவிரைவில் தீர்க்கப்படும். இவ்வாண்டின் பிற்பாதியில், ஒரு கோடிக்கு மேலான எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் விளக்குகளை பெய்ஜிங் மாநகரின் அரசு பரவல் செய்யும். இந்த விளக்குகள் பயன்படுத்தப்பட்டால், ஆண்டு முழுவதும், சுமார் 24 கோடி யுவான் சிக்கனப்படுத்தப்படக்கூடும் என்று தெரிகிறது.

1 2 3