
இந்த உலகளாவிய பொது சுகாதார பாதுகாப்பு நெருக்கடி பற்றி சீனாவின் தொற்று நோய் இயல் நிபுணரும், பெய்ஜிங் மாநகர நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த தொற்றுநோய் மற்றும் கொள்ளை நோய் கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் wang quan yi கூறியதாவது
பன்றி காய்ச்சல் முக்கியமாக பன்றிகளுக்கிடையில் பரவுகின்றது. ஒரு சில வேளையில் மனிதருக்கும் இது தொற்றும் வாய்ப்பு உண்டு. இதன் நச்சுயிரி தன்மை மாறி மனிதர்களுக்கிடையில் பரவ கூடும். தற்போது சளிக்காய்ச்சல் ஏ உருவாக்கும் இந்த புதிய நச்சுயிரி தடுப்புக்கான ஆற்றல் மனிதருக்கு இல்லை. ஆகையால், தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்ததாக அவர் கூறினார்.
அனைவரும் அறிந்தவாறு, பறவை காய்ச்சல் பறவை வகைகளிலிருந்து மனிதருக்கு தொற்றுகின்றது. மனிதர்களுக்கிடையில் இது அவ்வளவு வீரியமான முறையில் பரவ இயலாது. ஆனால், சளிக்காய்ச்சல் ஏ தொற்று மனிதர்களுக்கிடையில் பரவ முடியும். மூச்சுக்குழுவோடு தொடர்புடைய நச்சுயிரி பரவும் வடிவம் சார்ஸ் தொற்று வடிவத்தை போன்றது. ஆனால், அதன் தொற்று ஆற்றலும் உயிர் இழப்பு விகிதமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போதைய நிலைமையை பார்த்தால், சளிக்காய்ச்சல் ஏ நச்சுயிரி ஏற்படும் நோய் நிலைமை சார்ஸை விட குறைவே.
1 2 3
|