
நோய் தொற்று பரவலின் நிலைமைக்கேற்ப, முழு உலகிலும் எச்சரிக்கை நிலைமை 5வது நிலைக்கு உயர்த்த உலக சுகாதார அமைப்பு ஏப்ரல் 29ம் நாள் அறிவித்தது. ஒரே வகை சளிக்காய்ச்சல் நச்சுயிரி ஒரு பிரதேசத்தில் அல்லது குறைந்தது 2 நாடுகளில் மனிதரிடையில் பரவி, தொடர்ந்து தொற்றில் பரவுகின்றது என்று இது பொருட்படுகின்றது. தும்மல், இருமல், உடல் ரீதியான தொடர் முதலியவற்றால், மனிதருக்கிடையில் நச்சுயிரி தொற்று ஏற்படும். தொற்றியவர்களுக்கு, சாதாரண சளி தொற்றியவர்களைப் போல், காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடம்பு வலி, தலை வலி முதலியவை ஏற்படும். சிலவேளையில், வயிற்றுப்போக்கு, வாந்தி முதலியவையும் தோன்றும். மிக கடுமையான தொற்று ஏற்பட்டோர் நுரையீரல் நோயால் ஏற்படும் மூச்சு குழல் கோளாறால் உயிர் இழக்க கூடும்.
சளிக்காய்ச்சல் ஏ தொற்று பல்வேறு நாடுகளின் பரந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இதை சமாளிக்க சீனா பல்வகை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சீனச் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் mao qun an கூறியதாவது 1 2 3
|