• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-17 15:33:29    
Lv Dui என்னும் சற்றுச்சூழல் பாதுகாப்பு குழு

cri

வட மேற்கு சீனாவின் Gan Su மாநிலத்தின் தலைநகர் Lan Zhouவில், Lan Zhou பல்கலைக்கழகம் இருக்கிறது. சீனாவில் முக்கிய பன்நோக்க பல்கலைக்கழகங்களில் இது ஒன்றாகும். இப்பல்கலைக்கழகத்தில், பாட ஓய்வு நேரத்தில், மாணவர்கள் தத்தமது ஆர்வத்துக்கிணங்க, பல குழுக்களை உருவாக்கியுள்ளனர். இக்குழுக்களில், Lv Dui என்ற ஒரு குழு, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

1999ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Lv Dui குழு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தொண்டர்களின் குழுவாகும். பல்கலைக்கழக வளாகத்திலும் வெளியிலும் இருந்து, இக்குழுவில் சேர்ந்த மாணவர்கள், இலை, சூரியன் ஆகிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து, பல்வகை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கலந்து கொள்வதுண்டு.

Lan Zhou பல்கலைக்கழகத்தின் நான்காமாண்டு மாணவர் Shang Zhao cong பேசுகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், Lv Dui குழுவில் சேர்ந்த துவக்கத்தில், இதர மாணவர்களுடன் ஒரே ஒரு முறை பயன்படுத்தக்கூடிய உணவு குச்சிகளை பயன்படுத்தாமல் இருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறினார்.

ஆண்டுதோறும் Lv Dui குழு பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. எடுத்துக்காட்டாக, கழிவு நீர் கையாளும் ஆலைகளில் பயணம் செய்தல், பொது நல சவரொட்டிகளைத் தயாரித்து, ஒட்டுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திரைப்படங்களை ஒளிபரப்புதல், உலக சுற்றுச்சூழல் நாள் மற்றும் புவி நாள் தொடர்பான பிரச்சாரங்களை ஏற்பாடு செய்தல் முதலியவையாகும்.

1 2 3