• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-09-17 15:33:29    
Lv Dui என்னும் சற்றுச்சூழல் பாதுகாப்பு குழு

cri

சுற்றுச்சூழல் பாதுகாப்பை பொது நலத்தோடு முன்னேற்றுவதோடு, குடும்பப் பண்பாடு பற்றிய கருத்துக்களையும் Lv Dui குழு பிரச்சாரம் செய்கிறது. "Lan Zhou பல்கலைக்கழகத்தின் Lv Dui குழு, தனது குடும்பம்" என்று அதன் உறுப்பினர்கள் எண்ணுகின்றனர். Lv Dui குழு உறுப்பினர்கள் குடு்ம்பத்தினரை போல், ஒருவருக்கொருவர் உதவி அளித்து, ஒனறுபட்டு செயல்படுகின்றனர்.

Lv Dui குழுவில் சேர்வதற்கு முன், Gao Yu என்னும் மாணவியின் தன்னம்பிக்கை குறைவாகவே இருந்தது. இக்குழுவில் சேர்ந்த பின், அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, படிப்படியாக தெளிவடைந்தார். Lv Dui குழு என்ற இந்த பெரிய குடும்பத்தில், அவர் தேர்ச்சியையும் முதிர்ச்சியையும் பெறுவதுடன், மகிழ்ச்சியை அனுபவித்துள்ளார்.

பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற கருத்தால், பல்கலைக்கழக மாணவர்களை Lv Dui குழு ஈர்க்கின்றது. இதன் அன்பான குடும்பப் பண்பாடு, பெற்றோரிடமிருந்து பிரிந்து விட்ட இளைஞர்களுக்கு அன்பு தருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக இக்குழுவின் உயிராற்றலும் செல்வாக்கும் மென்மேலும் அதிகரித்து வருவதற்கான காரணம் இது.

Lv Dui குழுவுக்கு வயது 10. இக்குழுவில் சேர்ந்த மாணவர்கள் தொகுதி தொகுதியாக பட்டம் பெற்று பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுகின்றனர். புதிய மாணவர்கள் தொகுதி தொகுதியாக இதில் சேர்கின்றனர். இருந்தபோதிலும், மாணவர்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய இலட்சியமும், இளம் வயதில் தோன்றிய இலக்கும் மாற போவதில்லை. பசுமை சுற்றுச்சூழலை எதிர்கால சமூகத்தில் பரவல் செய்யும் கடமையில் இம்மாணவர்கள் ஊன்றி நிற்பர்.


1 2 3