
Lv Dui குழு மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளிலும், கோடைக்காலத் திட்டப்பணிகள், மாணவர்களின் கவனத்தை மிகவும் ஈர்க்கின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் திங்கள், Lv Duiவின் உறுப்பினர்கள், Gan Su மாநிலத்தின் Min Qin மாவட்டத்தில் பசுமை முகாம் என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். Min Qin மாவட்டம், Badanjilin பாலைவனத்துக்கும் Tengger பாலைவனத்துக்குமிடையிலான ஒரு பசுந்தரை பகுதி ஆகும். 20 நாட்கள் நீடித்த நடவடிக்கையில், Lv Duiவின் உறுப்பினர்கள், உள்ளூர் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் நிலைமையை ஆராய்ச்சி செய்து, பாலைவனக் கட்டுப்பாட்டில் பங்கெடுத்து, உள்ளூர் பள்ளிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாடங்களை நடத்தினர். பாலைவனத்தில் முகாமிட்ட அந்த சில நாட்களில், உறுப்பினர் அனைவரும் தத்தமது வீடுகளிலிருந்து கொண்டு வந்த உணவுகளை உட்கொண்டனர். அவர்கள் அருந்திய நீர் மிகவும் குறைவு. இயற்கைச்சுற்றுச்சூழல் மோசமாகுவது என்பதன் உண்மையான நிலையை அவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர்.
Lv Dui குழுவில் சேர்ந்த மாணவர்கள், பாட ஓய்வு நேரங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். கோடைக்கால விடுமுறையின் போதெல்லாம், நிலைமை மோசமான பிரதேசங்களுக்கு செல்லும் அவர்கள், சிறப்பான சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டப்பணிகளை மேற்கொள்கின்றனர். இக்குழுவின் நிதித்தொகை பற்றாக்குறையாக இருக்கும்போது, அவர்கள் தங்கள் கை பணத்தை வழங்கி செயல்படுகின்றனர்.
வானம் மேலும் நீலமாகவும், நீர் மேலும் தூய்மையாகவும், மரங்கள் மேலும் பசுமையாகவும மாறுவதே Lv Dui குழுவின் கனவு. அந்நாளை விரைவில் காண்பது, அவர்களது கடமை என நினைக்கிறார்கள். உயர்ந்த பொது நல சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட இக்குழுவின் உறுப்பினர்கள், ஒன்றுபட்டு செயல்படுவது இயல்பே. Lv Dui குழு நிறுவப்பட்ட துவக்கத்தில், 8 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது 600 பேர் இதில் சேர்ந்துள்ளனர். Lan Zhou பல்கலைக்கழகத்திலுள்ள மிக அதிகமான உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட குழு இது. நாட்டின் நூறு தலைசிறந்த மாணவர்கள் குழுக்களில் ஒன்றாகவும், நாட்டின் பத்து தலைசிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்களில் ஒன்றாகவும் Lv Dui குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
1 2 3
|