காஷ் பிரதேசம், சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ளது. பாகிஸ்தானின் வடக்கு பகுதியுடன் காஷ் பிரதேசம் 40 ஆண்டுகளாக எல்லை வர்த்தகம் செய்துள்ளது. நிதி நெருக்கடியின் பின்னணியில் இரு தரப்புகளுக்கிடை வர்த்தகம் எப்படியுள்ளது என்ற கேள்வியுடன் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்கள் காஷ் பிரதேசத்திற்குச் சென்றனர்.
இவ்வாண்டின் மே திங்கள் முதல் ஜுலை திங்கள் வரை, சீன-பாகிஸ்தான் எல்லை தாண்டி பணி புரிந்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் அதே காலத்தில் இருந்ததை விட 78 விழுக்காடு அதிகரித்தது. சரக்குகளின் ஏற்றுமதி இறக்குமதி அளவு, 102 விழுக்காடு அதிகரித்தது. 2009ம் ஆண்டில் இரு தரப்பு வர்த்தகம், பாதிக்கப்படாமல் அதிகரித்தது.
இக்கருத்தை கூறியவர், இரு நாடுகளுக்கிடை ஒரே தரை வழி சுங்கச் சாவடியின் தலைவரான guan changxin ஆவார். கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக, 2006ம் ஆண்டுக்குப் பின், இரு நாடுகளுக்கிடை சரக்கு வர்த்தக அளவும் பணியாளர் பரிமாற்றமும் விரைவாக அதிகரித்து வருகின்றன. 2007ம் ஆண்டின் ஜுலை திங்களில் நடைமுறைக்கு வந்த சீன-பாகிஸ்தான் தாராள வர்த்தக உடன்படிக்கை, இரு தரப்பு வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு சிறந்த கொள்கை ஆதரவு அளிக்கின்றது.
1 2 3
|