• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-12 17:17:54    
சுறுசுறுப்பான சீன-பாகிஸ்தான் எல்லை வர்த்தகம்

cri

ஏற்றுமதி வர்த்தகத் தொழில்நிறுவனங்களை நிதி நெருக்கடி பாதிப்பது திண்ணம் என்று yuan youjun ஏற்றுக்கொண்டார். ஆனால், காஷ் பிரதேசத்தின் இட மேம்பாட்டில் அவர் பேரார்வம் காட்டினார். சீன-பாகிஸ்தான் வர்த்தகத்தின் எதிர்காலம் மீது அவர் நிறைந்த நம்பிக்கை தெரிவித்தார்.

எனது தொழில்நிறுவனம் இடைவிடாமல் முன்னேறி வருகிறது. காஷில் 4 தரை வழி நுழைவாயில்கள் இருக்கின்றன. ஒரு விமான நிலையமும் உள்ளது. இந்த 5 வழிகள், காஷ் பிரதேசத்தை அண்டை நாடுகளுடன் இணைக்கின்றன. அண்டை நாடுகள் விரைவாக வளர்ந்து வருகின்றன. எதிர்காலத்தில், காஷ், ஒரு சரக்கு புழக்க மையமாக மாறுவது திண்ணம் என்று அவர் கூறினார்.

ஆண்டுதோறும், அதிக பாகிஸ்தான் வணிகர்கள், சின்ச்சியங்கின் காஷ் மற்றும் உருமுச்சியில் நடைபெறுகின்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கின்றனர். செப்டம்பர் முதல் நாளில் நடைபெற்ற 18வது உருமுச்சி வர்த்தகப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் வணிகர்கள் சுறுசுறுப்பாக கலந்து கொண்டனர் என்று சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் துணைத் தலைவர் ஹூவெய் தெரிவித்தார். அவர் கூறியதாவது,

கடந்த சில ஆண்டுகளில், பாகிஸ்தான் வணிகர் குழு ஆண்டுதோறும் உருமுச்சி வர்த்தகப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றது. தவிரவும், ஒவ்வொரு ஜூன் திங்கள் 28ம் நாள், அவர்கள் காஷில் நடைபெறும் மத்திய, மேற்கு மற்றும் தெற்கு ஆசிய வர்த்தகப் பரிமாற்றக் கூட்டத்திலும் கலந்து கொள்கின்றனர். இவ்வாண்டு, உருமுச்சி வர்த்தகப் பேச்சுவார்த்தையின் மொத்த 77 காட்சி இடங்களில் 20, பாகிஸ்தான் வணிகர்களுக்குரியவை. இது, அண்டை நாடுகளில் மிக அதிக காட்சி இடங்களை கொண்ட நாடாகும். எனவே, பாகிஸ்தானுடனான பரிமாற்றத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறோம் என்று அவர் கூறினார்.

சீனா, பாகிஸ்தான் இரு நாடுகளின் கூட்டு முயற்சி மூலம், இரு நாட்டுறவில் புதிய உற்சாகம் காணப்படுகிறது. காஷ் நகரம், எல்லை வர்த்தகம் மூலம் இரு நாட்டு நட்புக்காக ஆற்றிய சிறப்பு பங்கை உணரலாம். பல தரப்பட்ட, பல வழிகளிலான பரிமாற்றம் மூலம், இரு நாட்டு எல்லை வர்த்தகம் மேலும் சீரான எதிர்காலத்தை எதிர்கொள்ளும்.


1 2 3