நிதி நெருக்கடியால் தனது வணிகத்தில் அதிக பாதிப்பு ஏற்படவில்லை என்று 20 ஆண்டுகளாக எல்லை வர்த்தகம் செய்து வருகின்ற பாகிஸ்தான் வணிகர் சாபருல்லா கூறினார். அவர் கூறியதாவது,
சீன அரசுக்கு நன்றி!பாகிஸ்தான் வணிகர்களுக்கு சீனா சலுகையுடன் கூடிய கொள்கைகளை வழங்கி வருகிறது. எல்லையில் வர்த்தகம் செய்யும் பாகிஸ்தான் வணிகர்கள், 3000 யுவான் வரி விலக்கு சலுகையை பெற முடியும். சீனாவில் ஏற்றுமதி வணிகம் செய்தவர்கள் 8000 யுவான் வரி விலக்கு பெற முடியும். சீன அரசின் பல்வேறு வாரியங்கள், பாகிஸ்தான் வணிகர்களின் தேவையில் கவனம் செலுத்துகின்றன. இரு நாடுகளுக்கிடை நட்புறவு மலை போல் உயர்ந்தது. கடலை விட ஆழமானது. எனவே, இரு நாட்டு பரிமாற்றம் சீராக இருக்க முடியும் என்று அவர் கூறினார்.
அவர் கூறிய சலுகையுடன் கூடிய கொள்கைகளை, காஷ் பிரதேசத்திலான சீன-பாகிஸ்தான் நட்பு வர்த்தக நிறுவனத்தின் மேலாளர் னும் பாராட்டினார்.
கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கிடை வர்த்தகம், மிக விரைவாக வளர்ந்து வருகிறது. yuan youjun-ன் தொழில் நிறுவனத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டால், 2002ம் ஆண்டில் அது நிறுவப்பட்ட போது, 4 பணியாளர்களே இருந்தனர். தற்போது, இந்த எண்ணிக்கை 36ஆக அதிகரித்தது. 2005ம் ஆண்டின் பிற்பாதியில் வர்த்தகத் தொகை, 4 கோடி அமெரிக்க டாலராகும். 2008ம் ஆண்டு, இத்தொகை 16 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இட மேம்பாட்டைப் பயன்படுத்தி, அவர் சரக்கு வாகன அணியையும் உருவாக்கி போக்குவரத்து வணிகம் செய்தார்.
பல்வேறு நிலை வாரியங்களின் ஆதரவு, ஏற்றுமதி இறக்குமதி தொழில்நிறுவனங்களின் விரைவான வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். தற்போது, எல்லை தாண்டிய வழிமுறைகள் எளிதாகியுள்ளன. வர்த்தகத்தில் ரென்மின்பியில் கணக்கு தீர்ப்பதற்கு, சீன மக்கள் வங்கி ஒப்புதல் அளித்தது. இது பற்றி, yuan youjun கூறியதாவது,
தற்போது, பெரியளவிலான சரக்குகள் ஒரே நாளில் ஏற்றுமதி செய்ய முடியும். பாகிஸ்தானின் குடியேறுவோர் ஆணையம், எங்களுக்கு அதிக வசதிகளை வழங்கியது. இரு நாடுகளுக்கிடை ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் சீராக நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தானுக்கு செல்வதை மிகவும் விரும்புகிறோம். இரு நாடுகளுக்கிடை நட்புறவினால், பாகிஸ்தானுக்கு செல்வது பற்றி கவலைப்பட வேண்டாம் என்று அவர் கூறினார்.
1 2 3
|